மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி!
டெல்லி: சர்வதேச அளவில், பதற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. இப்படி இருக்கையில், இந்திய கடற்படையில் புதிய போர் கப்பல் ஒன்று புதியதாக இணைய இருக்கிறது. இந்த கப்பல், இந்திய கடற்படையின் பலத்தை இரட்டிப்பாக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐஎன்எஸ் தாராகிரி என பெயரிடப்பட்ட கப்பல், இந்த ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி முறைப்படி கடற்படையில் இணைக்கப்படுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவிற்குத் தலைமை தாங்குகிறார்.

'ஸ்டெல்த்' வசதி
இந்த கப்பலை, மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் (MDL) நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. எதிரி நாட்டு ரேடார்களின் கண்ணில் படாமல் மறைந்து செல்லும் 'ஸ்டெல்த்' வசதி இதில் உள்ளது. இதன் வடிவம் ரேடார் சிக்னல்களைத் திருப்பி அனுப்பும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. சுமார் 200 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதன் உருவாக்கத்தில் பங்களித்துள்ளன.
பாதுகாப்பு ஏவுகணைகள்
இது CODOG (Combined Diesel or Gas) முறையில் இயங்குகிறது. இதனால் அதிவேகமாகவும், நீண்ட தூரம் நடுக்கடலில் தங்கியிருந்தும் செயல்பட முடியும். ஒலியின் வேகத்தை விட அதிவேகமாகச் செல்லும் நிலப்பரப்பு ஏவுகணைகள் (BrahMos போன்றவை) மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் (MRSAM) இதில் உள்ளன. தவிர, 76 mm சூப்பர் ரேபிட் கன் மற்றும் நெருங்கி வரும் இலக்குகளைத் தாக்க 30 mm, 12.7 mm துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க 'ஆன்டி-சப்மரைன்' ராக்கெட்டுகள் மற்றும் டார்பிடோக்கள் (Torpedoes) உள்ளன. இது Project 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 4-வது போர்க்கப்பல் ஆகும்.
Project 17A என்றால் என்ன?
Project 17A (P-17A) என்பது இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நவீன மறைந்து தாக்கும் (Stealth) போர்க்கப்பல்களின் திட்டமாகும். இதற்கு 'நீலகிரி கிளாஸ்' (Nilgiri-class) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 7 கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்தியாவின் புகழ்பெற்ற மலைகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன:
- INS நீலகிரி (Nilgiri) - (ஜனவரி 2025-ல் இணைக்கப்பட்டது)
- INS ஹிமகிரி (Himgiri) - (ஆகஸ்ட் 2025-ல் இணைக்கப்பட்டது)
- INS உதயகிரி (Udaygiri) - (ஆகஸ்ட் 2025-ல் இணைக்கப்பட்டது)
- INS தாராகிரி (Taragiri) - (ஏப்ரல் 3, 2026-ல் இணைய உள்ளது)
- INS துனாகிரி (Dunagiri)
- INS விந்தியகிரி (Vindhyagiri)
- INS மகேந்திரகிரி (Mahendragiri)
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications