பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை பாய்ந்தது எப்படி? பின்னணியில் பரபரப்பு காரணம்? நடந்தது என்ன?
டெல்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை பாய்ந்தது எப்படி? ஏவுகணை ஒன்று எப்படி தவறுதலாக விண்ணில் ஏவப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதை இந்திய ராணுவமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை 124 கிலோ தூரம் பாகிஸ்தான் எல்லைக்குள் புதன் கிழமை மாலை வந்தது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளது.

என்ன சொன்னார்?
ஆனால் இதில் குண்டுகள், ஆயுதங்கள் இல்லை என்பதால் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் Inter-Services Public Relations பிரிவின் இயக்குனர் பாபர் இப்திக்கார் பேட்டி அளித்துள்ளார். இந்த ஏவுகணை 3 மேக் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ மீட்டர் வரை வந்தது. ஏவப்பட்ட நேரத்தில் இருந்து 6.46 நிமிடங்கள் இது பறந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

எப்படி?
இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை பாய்ந்தது எப்படி? ஏவுகணை ஒன்று எப்படி தவறுதலாக விண்ணில் ஏவப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. The Print ஊடகம் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை ஆகும். இது ஆயுதம் பொருத்தப்பட்டது அல்லது. பயிற்சிக்காக தயார் நிலையில் இருந்த practice version பிரம்மோஸ் ஆகும்.

சிர்சா
அதோடு இந்தியாவின் சிர்சா ஏவுகணை தளத்தில் இருந்து இது ஏவப்படவில்லை. மாறாக பிரம்மோஸ் ஏவுகணை ரகசிய சாட்டிலைட் ஏவுதளம் ஒன்றில் இருந்துதான் ஏவப்பட்டு இருக்கிறது என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் இடம்பெற்றுள்ள விவரங்களில், பாகிஸ்தான் சொன்னது போல இந்த ஏவுகணை முதலில் ராஜஸ்தான் பக்கம் சென்று அதன்பின் பாகிஸ்தான் பக்கம் செல்லவில்லை. மாறாக தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் நோக்கி சென்றுள்ளது.

மிஸ் ஆனது
ஏற்கனவே அதில் இருக்கும் சில டார்கெட்டுகளை நோக்கி சென்றுள்ளது. ஆனாலும் அந்த டார்கெட்டுகளை தாக்காமல் சில காரணங்களால் வெற்றிடத்தில் இந்த ராக்கெட் விழுந்துள்ளது. ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் போது இப்படி ராக்கெட் மிஸ்ஸாகி ஏவப்பட்டுள்ளது. மாறாக இந்த ராக்கெட்டை வேண்டுமென்றே டெஸ்ட் செய்யவில்லை. டெஸ்டிங்கின் போது இப்படி தவறி பாகிஸ்தானுக்கும் செல்லவில்லை.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் சொல்வது போக நாங்கள் ஏவுகணை டெஸ்டிங் செய்யவில்லை. மாறாக inspection செய்யும் போதே இப்படி நடந்தது. ஏவுகணை டெஸ்டிங் என்றால் அதை அந்தமான் நிக்கோபார் மையத்தில் இருந்தே செய்திருப்போம். இதை பற்றி உயர்மட்ட கமிட்டி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தியா இதை பற்றி ராக்கெட் ஏவப்பட்ட உடன் பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டது. ஆனால் நாங்கள் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை என்று பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் பாபர் கூறுகிறார்.

பாகிஸ்தான் மோசம்
பாகிஸ்தான் எங்களின் ஏவுகணை பாதையை கணிக்கவும் தவறிவிட்டது. எங்கள் ஏவுகணை எப்படி செல்கிறது என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை. ஏவுகணைகளை கணிக்கும் அல்லது எதிர் தாக்குதல் நடத்தும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதை இது உணர்த்துகிறது. 124 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாகிஸ்தான் எல்லைக்குள் பிரம்மோஸ் சென்றுள்ளது. இதை 3.44 நிமிடம் நேரம் இருந்தும் பாகிஸ்தானால் அழிக்க முடியவில்லை.

பாதுகாப்பு இல்லை
அவர்களின் வான்வெளி பாதுகாப்பு வேலை பார்க்கவில்லை என்பதை இது உணர்த்துகிறது என்று The Print ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்த ஏவுகணை எப்படி தவறுதலாக ஏவப்பட்டு இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. பொதுவாக ஏவுகணைகளை ஏவ பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் இடங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பல்வேறு ஒப்புதல்களை அளிக்க வேண்டும். பின்னர் கவுன்டவுன் கொடுக்க வேண்டும். இதெல்லாம் செய்த பின்பே ஏவுகணை ஏவும். ஆனால் இவ்வளவும் தவறுதலாக நடந்தது என்பது நம்ப முடியவில்லை என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.'
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications