மிக முக்கியமான கட்டத்தில் இன்று நடக்கும் காங்கிரஸ் கூட்டம்.. புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறாரா?
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இன்று டெல்லியில் முக்கிய கூட்டம் அக்கட்சி சார்பாக நடத்தப்பட உள்ளது.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இன்று டெல்லியில் முக்கிய கூட்டம் அக்கட்சி சார்பாக நடத்தப்பட உள்ளது.
லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவியது காங்கிரஸ் கட்சியை பாதித்துள்ளது. தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார். இதனால் புதிய தலைவரை காங்கிரஸ் விரைவில் தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , நான் புதிய தலைவரை தேர்வு செய்ய மாட்டேன். கண்டிப்பாக என்னுடைய தலையீடு இதில் இருக்காது என்றும் கூறிவிட்டார்.

புதிது
இதனால் காங்கிரஸ் கட்சி, புதிய தலைவரை கமிட்டி மீட்டிங் மூலம் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இதற்கான முதற்கட்ட மீட்டிங் இன்று டெல்லியில் நடக்க உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தலைமையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.

என்ன
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி உள்ள ராகுல் காந்தியும் இதில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்று மாலை
இன்று மாலையே காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கட்சிக்குள் முக்கிய மாற்றங்கள் நிகழ்வதால், தற்போது இடைக்கால தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

குடும்பம்
இன்று இடைக்கால தலைவரை நியமனம் செய்துவிட்டு, பின் சில நாட்களில் தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முயலும் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் நேரு குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தலைவராக தேர்வாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications