ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாடணும்... நாடாளுமன்றத்தில் விருப்பத்தை தெரிவித்த பாஜக பெண் எம்.பி
டெல்லி: பெண்கள் தினத்தைப் போல சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜகவின் எம்பி சோனல் மான்சிங் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இன்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பிரதமர் மோடி, தொடங்கி பல்வேறு தலைவர்களும் பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று பாஜக எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இன்று பெண்கள் தினம் கொண்டாடப்படுவதால், பெண்களுக்கு வாழ்த்தது தெரிவிக்க அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.
அப்போது பேசிய பாஜக ராஜ்ய சபா உறுப்பினர் சோனல் மான்சிங், "இந்த உலகில் பெண்ணாக இருப்பது கடினமான ஒன்று. ஏனென்றால் பெண் ஒருவர் ஆண் போலச் சிந்திக்க வேண்டும், பெண் போல நடந்துகொள்ள வேண்டும், பார்க்க அழகு தேவதை போல இருக்க வேண்டும். குதிரை போல உழைக்க வேண்டும்" என்றார்.
மேலும், பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், பெண்கள் தினத்தைப் போல சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரிக்க தொடங்கினர். அப்போது சோனல் மான்சிங், நமக்கு எப்போதும் உலகில் சமத்துவம் தேவை என்று பதிலளித்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications