பாகிஸ்தானில் செம்ம வேட்டை!காஷ்மீரில் கொடூர தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயீத்தின் கூட்டாளி சுட்டுக் கொலை!
டெல்லி: இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தளபதி அபு கதால், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வலது கரங்களில் ஒருவரான அபு கதால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது லஷ்கர் இ தொய்பாவுக்கு பெரும் பின்னடைவாகும்.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்தது ஹபீஸ் சயீத் பயங்கரவாதி. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். சர்வதேச நாடுகளால் தேடப்படுகிற பயங்கரவாதி ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.

ஹபீஸ் சயீத் உத்தரவுப்படி மும்பை, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து லஷ்கர் இ தொய்பா அமைப்பு தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. ஹபீஸ் சயீத்தின் வலது கரமாக, அபு கதால் முக்கிய குற்றவாளி என பிரகடனம் செய்திருந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அபு கதால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல்களை நடத்தியவர். இந்தியாவில் தேடப்படுகிற குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் அபு கதால், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் உறவினர்கள், கூட்டாளிகள் அடுத்தடுத்து மர்ம நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வரும் நிலையில் அபு கதால் கொல்லப்பட்டிருப்பதும் மிக முக்கியமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
அபு கதால், லஷ்கர் இ தொய்பாவின் மிக முக்கியமான தளபதிகளில் ஒருவர். இந்தியாவில் பல்வேறு தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீட்டிய நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அந்த இயக்கத்துக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications