டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்?.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்!

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவருடைய டெல்லி வீட்டில் இல்லாத காரணத்தால் சிபிஐ அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் இன்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் ப. சிதம்பரம் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    வீட்டில் இல்லை

    வீட்டில் இல்லை

    இதையடுத்து ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால் ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ஐந்து நிமிடத்தில் திரும்பி சென்றனர். ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    சிலர்

    சிலர்

    இந்த நிலையில் அங்கு சில சிபிஐ அதிகாரிகள் இன்னும் இருக்கிறார்கள். ப. சிதம்பரம் அவரின் டெல்லி வீட்டிற்கு திரும்பி வர வாய்ப்புள்ளது. அவர் வந்தால் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் அங்கு குவிய வாய்ப்புள்ளது. இதனால் தகவல் கொடுப்பதற்காக அங்கு சிபிஐ அதிகாரிகள் சிலர் இருக்கிறார்கள்.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    அதே சமயம் தமிழகத்தில் உள்ள அவரின் இரண்டு வீட்டிற்கும் சிபிஐ அதிகாரிகள் அனுப்பப்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சிவகங்கையில் இருக்கும் அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    நாளை வாய்ப்பு

    நாளை வாய்ப்பு

    ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. அப்போது ஜாமீன் கிடைத்தால் ப. சிதம்பரத்திற்கு பிரச்சனை கிடையாது. ஆனால் சிபிஐ அதற்கு முன்பே ப. சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது. அதற்காகத் தான் சிபிஐ அதிரடியில் இறங்கி உள்ளது என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+