6.30 மணி வரை ஆலோசனை செய்தார்.. அதன்பின் தெரியாது.. ப. சிதம்பரத்தை தீவிரமாக தேடும் சிபிஐ!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்!

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்று பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.

    விசாரணை

    விசாரணை

    இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். இன்று இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    என்ன தீவிரம்

    என்ன தீவிரம்

    இதையடுத்து சிதம்பரத்தை கைது செய்ய தற்போது சிபிஐ தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு ப. சிதம்பரம் இல்லை. இதனால் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பி வந்தனர்.

    எங்கே

    எங்கே

    இதனால் தற்போது ப. சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இன்று இரவே கூட ப.சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் அவருக்கு நெருக்கமானவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அட

    அட

    ப. சிதம்பரம் இன்று மாலை 6.30 மணி வரை டெல்லியில் தன்னுடைய வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். நாளை அவரின் ஜாமீன் மனு மீது விசாரணை நடக்க உள்ளது. அதுகுறித்து சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அதற்கு பின் சிதம்பரம் எங்கு சென்று என்று தெரியாததால் சிபிஐ அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+