உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ஆகஸ்ட் 21-ந் தேதி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திகார் சிறையில் ப. சிதம்பரத்தை இன்று கைது செய்தனர். இதை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது அமலாக்கத்துறை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது.
அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் தர சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம் நடராஜ், சாட்சிகளை சிதம்பரம் கலைத்துவிடுவார் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இவ்வழக்கின் மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றம், ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications