Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாச்சு? 3வது பந்தில் நடந்ததை நோட் பண்ணீங்களா? கொல்கத்தா - டெல்லி மேட்சில் நடந்த பரபர சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொல்கத்தா டெல்லி அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2022 போட்டி இன்று நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் இந்த சீசனில் சிறப்பாக ஆடி வருகிறது. இன்று டாஸ் தோல்வி அடைந்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடியாக ஆடிய வார்னர் 61, ஷா 51 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி அணி 20 இவரில் 215-5 ரன்கள் எடுத்தது.

 கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

இந்த நிலையில் அதன்பின் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கத்திலேயே திணறதொடங்கியது . ஏனென்றால் கொல்கத்தா அணியில் ரஹானே பேட்டிங் இறங்கியதும் முதல் பந்திலேயே டிஆர்எஸ் கேட்கப்பட்டது. அவர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தது போல சத்தம் கேட்டது. இதையடுத்து அவருக்கு விக்கெட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் உடனே ரஹானே டிஆர்எஸ் கேட்டார்.

ரஹானே

ரஹானே

இதில் ரஹானே பேட்டில் பந்து படவில்லை என்பது உறுதியாக தெரிந்தது. அவரின் வலது கால் பேடில் பட்டு பந்து சென்றது. இதனால் அவரின் விக்கெட் திரும்ப பெறப்பட்டது. அதே சமயம் அவரின் எல்பிடபிள்யூவும் சோதிக்கப்பட்டது. அதிலும் அவர் விக்கெட் இல்லை என்று உறுதியானது. இதையடுத்து இரண்டாவது பந்தை மீண்டும் முஸ்தபிசர் வீச வந்தார்.

என்னாச்சு

என்னாச்சு

அந்த பந்தில் பந்து ரஹானே காலில் பட எல்பிடபிள்யூ விக்கெட் கொடுக்கப்பட்டது. இதை எடுத்து மீண்டும் ரஹானே ரிவ்யூ கேட்டார். இதில் பந்து காலில் படும் முன் இன்சைட் எட்ஜ் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த விக்கெட்டும் திரும்ப பெறப்பட்டது. இப்படி முதல் இரண்டு பந்திலேயே அடுத்தடுத்து இரண்டு டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 சத்தம் இல்லை

சத்தம் இல்லை

இந்த நிலையில் மூன்றாவது பந்தில் ரஹானேவின் பேட்டில் அவுட்சைட் எட்ஜ் ஆகி கீப்பர் பண்டிடம் கேட்ச் போனது. ஆனால் இதில் சத்தம் எதுவும் கேட்கவில்லை. இதனால் யாருமே அப்போது அப்பீல் செய்யவில்லை. ஆனால் பின்னர் ரீப்ளேவில் பந்து ரஹானே பேட்டில் பட்டது உறுதியாக தெரிந்தது. முதல் இரண்டு பந்துகளில் ரஹானேவிற்கு விக்கெட் கொடுத்த காரணத்தால் மூன்றாவது பந்தில் நடுவரும் ஏனோ உண்மையான விக்கெட்டிற்கு விக்கெட் கொடுக்கவில்லை... டெல்லி அணியும் ரிவ்யூ இதற்கு கேட்கவில்லை.

ரஹானே

ரஹானே

பந்து பொதுவாக பேட்டில் பட்டால் அது பேட்ஸ்மேனுக்கு தெரியும். அதிலும் அவுட் சைட் எட்ஜ் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். இது தெரிந்தும் ரஹானே பெவிலியன் செல்லாமல் இருந்தாரா.. இல்லை அவருக்கும் பந்து பேட்டில் பட்டது தெரியவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதை வைத்து பலரும் கலாய்த்து வருகின்றனர். களத்தில் நடந்த இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+