ஐபிஎல் ஏலம்.. ஜியோ சினிமா ஆப் பிரச்சினையா.. சரி செய்வது எப்படி?
டெல்லி: ஐபிஎல் மெகா ஏலம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு ஜியோ சினிமா ஆப்பில் நேரடி ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் ஏலம் நிகழ்வை காண சென்றபோது, ஜியோ சினிமா ஆப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதை சரிசெய்வது எப்படி.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு ஆண்டு சாதாரண ஏலம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும் நடைபெறும். அதன்படி 2025 ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெறுகிறது. சவுதி அரேபியா ஜெட்டா பகுதியில் இன்றும் நாளையும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. முதல் நாளுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மெகா ஏலம் நிகழ்வை ஜியோ சினிமா ஆப்பில் லைவாக பார்க்கலாம். பொதுவாக ஐபிஎல் ஏலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இந்தமுறை மெகா ஏலம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மெகா ஏலம் என்பதால் பல முன்னணி வீரர்கள் ஏலத்து வருவார்கள். அவர்களை ஏலத்தில் எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் போட்டி போடுவார்கள்.
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு பலர் ஏற்கனவே மாதிரி ஏலம் (Mock Auction) நடத்தினார்கள். அதற்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மாதிரி ஏலம் வீடியோவையே சமூகவலைதளங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்தனர்.
இந்நிலையில் மெகா ஏலத்தை பார்ப்பதற்கு பலர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் ஜியோ சினிமா ஆப்பில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஐபிஎல் ஏலத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். ஒருகட்டத்தில் ரசிகர்கள் தங்களின் கோபத்தை சமூகவலைதளங்களில் புகாராக கொட்ட தொடங்கினார்கள்.
இந்தப் பிரச்னை தங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காகவும் சமூகவலைதளங்களில், "உங்களுக்கும் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?" என்று பதிவு போட்டனர். ஜியோ சினிமாவை டேக் செய்து கடுமையாக விமர்சித்தனர்.
"எங்கள் வைஃபை 150 எம்பிபிஎஸ் வேகத்தில் உள்ளது. இருப்பினும் உங்கள் ஆப் வேலை செய்யவில்லை. என்ன சர்வர் வைத்திருக்கிறீர்கள். முக்கியமான நிகழ்வில் உங்கள் ஆப் சொதப்புகிறது. உலகிலேயே உங்கள் ஆப் தான் மிகவும் மோசமானது." என்று விமர்சித்தனர்.
"Something went wrong & Error (8039)" என்று காட்டியதால் ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் இதே மாதிரியான புகார்களை முன் வைத்தனர். சிலருக்கு "Error (419)" என்று காட்டியது. இது பெரும்பாலும் கனெக்டிவிட்டி தொடர்பான பிரச்சினை என்று தகவல் வெளியானது.
இதை சரி செய்வதற்கு சில தீர்வுகளும் உள்ளன. உங்கள் வைஃபை அல்லது மொபைல் இன்டர்நெட்டில் ஆப் ஸ்ட்ரீம் ஆவதற்கு தேவையான வேகம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது ரவுட்டரை ரீ - ஸ்டார்ட் செய்தும் இணைப்பை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு போனில் Go to settings > Apps > JioCinema >Storage, Clear cache and data என்ற ஆப்ஷனை முயற்சி செய்து பார்க்கலாம்.
IOS பயன்பாட்டாளர்கள் ஆப்பை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, மீண்டும் இன்ஸ்டால் செய்து பார்க்கலாம். காரணம் அதில் Clear cache ஆப்ஷன் இருக்காது. உங்கள் கேஜெட்டில் ஜியோ சினிமா ஆப் அப்டேட் ஆகியுள்ளதா என்பதையும் ஒருமுறை சோதனை செய்து பார்க்க வேண்டும். www.jiocinema.com என்ற ப்ரவுசரில் நேரடியாக சென்று கனெக்ட் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications