டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை.. நீச்சல் குளங்களும் மூடப்படுகிறது.. அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் டெல்லியில், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நீச்சல் குளங்களும் மூடப்படுகின்றன.

துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இன்று மதியம் நிருபர்களை சந்தித்தபோது இந்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

IPL will not held in delhi due to Coronavirus

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறோம். இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட எந்த ஒரு மக்கள் கூடும் விளையாட்டு போட்டிகளையும், டெல்லி அரசு நடத்த அனுமதிக்காது.

விளையாட்டு நடவடிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் இங்கு ஏற்பாடு செய்யப்படாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளியை பராமரிக்குமாறு மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 31 ஆம் தேதி வரை நகரத்தில் உள்ள அனைத்து பொது நீச்சல் குளங்களையும் உடனடியாக மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லி அரசின் சுகாதாரத் துறை வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது. மக்கள் பயன்படுத்தும் அனைத்து ஹோட்டல் மற்றும் பிற நிறுவனங்களின் நீச்சல் குளங்கள் மூடப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+