Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓமன் வளைகுடாவில் கச்சா எண்ணெய் கப்பல் கடத்தல்- ஈரான் மீது சந்தேகம்- பதற்றத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓமன் வளைகுடாவில் பனாமா நாட்டு கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல் திடீரென வழிமறிக்கப்பட்டு ஈரான் நோக்கி கடத்திச் செல்லப்பட்டது. பின்னர் நடுக்கடலில் அந்த கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த கடத்தலின் பின்னணியில் ஈரான் கடற்படை இருப்பதாக உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. ஆனால் ஈரான் இதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

உலகின் பிரதான கப்பல் பாதைகளில் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தி. இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மர்மமான முறைகளில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மர்ம தாக்குதல்களுக்கு ஈரான் காரணம் என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டு. இதனை ஒவ்வொரு முறையும் ஈரான் மறுத்தும் வருகிறது.

Iran backed forces hijacks oil tanker in Gulf of Oman?

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடல் நோக்கி இஸ்ரேல் எண்ணெய் கப்பலான எம்.வி. மெர்சிர் ஸ்ட்ரீட் பயணித்து கொண்டிருந்தது. அப்போது அந்த இஸ்ரேல் கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தது. இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லபீட் கூறுகையில், எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரானின் பயங்கரவாதம்தான் காரணம். உலக நாடுகளில் ஈரானின் இத்தகைய அராஜகங்கள் குறித்து மவுனமாக இருக்கக் கூடாது என்றார். ஆனால் இஸ்ரேலின் வழக்கமான அவதூறு என ஈரான் நிராகரித்திருந்தது.

தற்போது ஓமன் வளைகுடா பகுதியில் மீண்டும் ஒரு கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பனாமா நாட்டு கொடியுடன் Asphalt Princess என்ற கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் அரபிக் கடல் நோக்கி பயணித்து கொண்டிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் Fujairah துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கப்பல் திடீரென இடைமறிக்கப்பட்டு ஈரான் நோக்கிச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் உலக நாடுகள் மீண்டும் ஈரானை நோக்கி குற்றம்சாட்டி இருந்தன. ஈரான் கடற்படையினர்தான் இந்த கடத்தலுக்கு காரணம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின.

ஆனால் ஈரானோ தங்களது நாட்டின் மீது குற்றம்சுமத்துவதையே சில நாடுகள் வழக்கமாக வைத்திருக்கின்றன; மேற்கத்திய ஊடகங்களும் ஈரான் மீது அவதூறு பரப்புகின்றன என சாடியிருந்தது.

தற்போது இந்த கப்பல் விடுவிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டனின் United Kingdom Maritime Trade Operations ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமன் வளைகுடா, ஹோர்முஸ் ஜலசந்தி கடற்பரப்பில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

உலக நாடுகள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பெரும்பாலான கச்சா எண்ணெய் கப்பல்களை இயக்குகின்றன. உலகின் 20% எண்ணெய் விநியோகம் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தியை காரணம் காட்டி ஈரான் உலக நாடுகளை மிரட்டியும் வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்கா- இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி விவகாரத்தின் போது ஹோர்முஸ் ஜலசந்திதான் பேசுபொருளானது. ஈரான் எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியையே மூடிவிடும் எனவும் மிரட்டியது அந்நாடு. ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிப் பாருங்கள்.. எங்க பதிலடி எப்படி இருக்கும்னு தெரியும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

அதேபோல் ஹோர்முஸ் ஜலசந்தி பிரச்சனைக்கும் பதற்றத்துக்கும் உள்ளானால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உலக நாடுகள் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துவிடும். இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்படையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+