"இஸ்லாமிய நேட்டோ.." குட்டிக்கரணம் போடும் பாகிஸ்தான்.. உள்ளே வரும் ஈரான்? உற்று கவனிக்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் பிற முஸ்லீம் நாடுகளுடன் இணைந்து இஸ்லாமிய நோட்டோ போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. வளைகுடா பகுதிகளில் இப்போது தொடர்ச்சியாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே இந்த இஸ்லாமிய நேட்டோவில் ஈரானும் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தலைமையில் நேட்டோ அமைப்பு இருக்கிறது. உலகிலேயே மிகவும் வலிமையான ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பாக இந்த நேட்டோ அமைப்பு தான் கருதப்படுகிறது. நேட்டோவில் எந்தவொரு நாட்டின் மீது யார் படையெடுத்தாலும் ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும் வரும் என்பதே இதன் சிறப்பாகும்.

Pakistan

இஸ்லாமிய நாடுகள்

இதற்கிடையே கிட்டத்தட்ட நேட்டோ போலவே இஸ்லாமிய நாடுகளுக்கான ஒரு அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின் உதவியுடன் பாகிஸ்தான் இதற்கான முயற்சியை எடுத்து வருகிறது. இதற்கிடையே இந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈரானையும் இணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிகாரி ஒருவர் இந்த தகவலை பகிர்ந்ததாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஈரான், சவுதி அரேபியா, துருக்கி அல்லது பாகிஸ்தான் என எந்தவொரு நாடும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இருப்பினும், இந்த தகவல் உண்மையாகி ஈரான் அந்த அமைப்பில் இணைய ஒப்புக்கொண்டால்.. மேற்கு ஆசியாவின் பாதுகாப்பில் மிக பெரிய மாற்றம் ஏற்படலாம். சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் ஒரு முக்கிய அம்சமாக, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ

இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் நேட்டோவுடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால், நேட்டோவை போல ஒருங்கிணைந்த ராணுவ கட்டமைப்பு அல்லது நிரந்தர ராணுவ அமைப்பு இதில் இல்லை. பிராந்திய பாதுகாப்பில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து, கூட்டு தடுப்பு திறனை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

ஏன் ஈரானுக்கு அழைப்பு?

சவுதியும் ஈரானும் பல ஆண்டுகளாக பிராந்திய அளவில் பரம எதிரிகளாக இருந்தன. இரு நாடுகளும் 2023ஆம் ஆண்டில் தான் மீண்டும் தூதரக உறவுகளை கூட மீண்டும் ஏற்படுத்தி கொண்டன. இருப்பினும் ஏமன், இஸ்ரேல், வளைகுடா பாதுகாப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. இந்த சூழலில், ஈரான் இந்த கூட்டணியில் இணைந்தால், சவுதி மற்றும் ஈரான் ஒரே பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்புக்குள் வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும்.

துருக்கியும் பாகிஸ்தானும் ஈரான்- அமெரிக்க பதற்றங்களை தணிக்க பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருந்தன. அதே நாடுகள் தான் இந்த இஸ்லாமிய நேட்டோவையும் உருவாக்க முயல்வது குறிப்பிடத்தக்கது. சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுடன் ஈரான் இணைந்தால், இந்த அமைப்பை வெறுமனே சன்னி முஸ்லிம் நாடுகளின் கூட்டணி என்று கூற முடியாது. மாறாக, போட்டி நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை கட்டுப்படுத்தும் பிராந்திய பாதுகாப்பு அமைப்பாக மாற வாய்ப்புள்ளது.

முக்கிய கேள்வி

உலகின் பிற நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருக்கும் நாட்டை தாக்கினால் மற்ற நாடுகள் ஆதரவாக வரும் என்பது ஓகே. ஆனால், ஒரு உறுப்பு நாடு மற்றொரு உறுப்பு நாட்டை தாக்கினால் என்ன செய்வது என்ற கேள்வி எழும். ஈரான் மற்றும் சவுதிக்கு இடையே இன்னும் பல முக்கியமான பிரச்சனைகள் இருப்பதால், கூட்டுப் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருக்கலாம்.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்த மாற்றம் இந்தியாவுக்கும் முக்கியமானது. சவுதி அரேபியாவுடன் இந்தியாவுக்கு எரிசக்தி, முதலீடு மற்றும் வளைகுடா பொருளாதாரம் என பல விஷயங்களில் வலுவான உறவு உள்ளது. மறுபுறம், மத்திய ஆசிய நாடுகளை வர்த்தகத்திற்கு இந்தியா தொடர்பு கொள்ளவும் ஈரான் முக்கியமானது. குறிப்பாக பாகிஸ்தான் தயவு இல்லாமலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் செய்ய சாபஹார் துறைமுகம் உதவும்

ஈரான் சவுதி உறவு மேலும் சீராகி, பிராந்திய பதற்றம் குறைந்தால், வளைகுடா கப்பல் போக்குவரத்து, எரிசக்தி சந்தை மற்றும் இந்திய வர்த்தகத்துக்கு சாதகமாக அமையலாம். அதே நேரத்தில், இந்த கூட்டணியில் பாகிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்குகிறது. அதேநேரம் சவுதி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் இந்தியா தனித்தனி நல்லுறவை வைத்திருப்பதால், எந்த அணியிலும் சேராமல் பிராந்திய அமைதியை ஏற்படுத்த இந்தியாவால் முடியும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+