இந்தியாவுக்கு பயிற்சி வந்த ஈரான் கப்பல் மீதே அமெரிக்கா அட்டாக்! மோடியின் பதில் என்ன? உலுக்கும் காங்கிரஸ்
டெல்லி: இந்தியாவுக்கு பயிற்சி வந்த ஈரானிய கடற்படைப் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இந்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய அரசு 'கோழைத்தனமாகவும் அச்சம்கொண்டதாகவும்' செயல்படுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து, இந்திய அரசு ஒரு தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டது என்பதை ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தையும், துணிச்சலின்மையையும் இது பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

குண்டு மழை பொழியும் ஈரான் - அமெரிக்கா
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தொடர்ந்துள்ள தாக்குதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தை நெருங்கிவிட்டது. ஈரான் மீது அமெரிக்கா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில் பதிலுக்கும் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு முழுவதும் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, நேற்று இந்திய பெருங்கடலில் இலங்கை கடல் பரப்புக்கு அப்பால் சென்று கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி தாக்கி அழித்தது. அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரான் கப்பலில் இருந்த 83 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி மீது காங்கிரஸ் விமர்சனம்
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிவித்த ஈரான், அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பல் இந்திய பெருங்கடலில் நின்ற போது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இந்தியாவுக்கும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்து இருக்கும் காங்கிரஸ் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது:-
18 போர்க்கப்பல்கள் பங்கேற்றன
இந்திய கடற்படையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டு கடற்படைப் பயிற்சியாக மிலான் (MILAN) உள்ளது. இந்த பயிற்சி முதன் முதலாக 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 13-வது பயிற்சி, பிப்ரவரி 19 முதல் 25 வரை, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகளின் 18 போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
இந்தப் பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், நேற்று இலங்கையின் காலே நகரத்திற்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில், மிலான் பயிற்சியில் பங்கேற்றிருந்த ஈரான் போர்க்கப்பலை, அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.
பயத்துடனும் தயக்கத்துடனும்
அந்த ஈரான் போர்க்கப்பல் தனது நாட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் இந்த செயல், இந்தியாவுக்கும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து இருக்கிறது. இதுவரை இந்திய அரசு இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்காதது மேலும் அதிர்ச்சியை தருகிறது.
ஈரானில் குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக மோடி அரசு அமைதி காப்பது வியப்பளிக்காமல் இருக்கலாம். ஆனால், இந்திய அரசு இதுநாள் வரையிலும் இவ்வளவு பயத்துடனும் தயக்கத்துடனும் இருந்தது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications