ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா?
டெல்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் புரிந்து வருகின்றது. இது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் ஏற்றுமதி நடக்கும் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவு வாயிலாக இருக்கும் ஓமன் வளைகுடாவில் ரேடாரில் சிக்காத சக்திவாய்ந்த ஐஎன்எஸ் சூரத் (INS Surat) போர்க்கப்பலை நம் நாடு நிலைநிறுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.

ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை தளம், விமானதளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் அட்டாக் நடத்தி வருகிறது.
87 பேர் வரை பழி
இந்த போர் இந்திய பெருங்கடல் வரை வந்துவிட்டது. ஈரானின் ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் மீது இந்திய பெருங்கடல் அருகே அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. இதில் 87 வரை பலியாகி உள்ளனர்.
இந்த ஈரானின் போர்க்கப்பல் நம் நாட்டில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. 'சர்வதேச கடற்படை ஆய்வு 2026' என்ற நிகழ்ச்சியில் பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 25ம் தேதி வரை வங்காள விரிகுடா கடலில் நடந்த கடற்படை பயிற்சியில் ஈரான் போர்க்கப்பல் பங்கேற்று நாடு திரும்பியபோது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது.
ஐஎன்எஸ் சூரத்
தற்போது இந்த போர்க்கப்பலில் உள்ளவர்களுக்கு இலங்கை கடற்படை உதவி செய்து வருகிறது. மேலும் இந்த விஷயத்தில் அமெரிக்காவை நம் நாடு கண்டிக்கவில்லை என்று மத்திய அரசை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் திடீரென்று நம் நாட்டின் சக்தி வாய்ந்த ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள் என்னென்ன?
இந்நிலையில் தான் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவு வாயிலாக அறியப்படும் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் நம் நாட்டின் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் 2025 ஜனவரி மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த கப்பலில் உள்ள 75 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பமாகும்.
புராஜெக்ட் 15பி திட்டத்தின் 4வது மற்றும் கடைசி போர்க்கப்பலாக இது உருவாக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள போர்க்கப்பல்களில் அதிநவீன வசதி கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக உள்ளது. இது 7,400 டன் எடை கொண்டது. 163 மீட்டர் நீளம் கொண்டது. இதில் உள்ள 4 கியாஸ் டர்பைன்கள் காரணமாக 30 நாட்ஸ் வரையிலான வேகத்தை எட்டக்கூடியது.
ரேடாரில் சிக்காது
மேலும் இது ஸ்டெல்த் வகை போர்க்கப்பலாகும். இதனால் இந்த கப்பல் எதிரிகளின் ரேடாரில் சிக்காது. இந்த கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவ முடியும். ஏஐ தொழில்நுட்ப மூலம் இயங்கும் அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட நம் நாட்டின் முதல் போர்க்கப்பல் இதுவாகும்.
பிரமோஸ் டூ ராக்கெட் லாஞ்சர்கள்
அதிவேக பிரமோஸ் ஏவுகணை, பராக்கு-8 ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் கனரக டார்பிடோ குழாய் லாஞ்சர்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களை இந்த போர்க்கப்பலில் இருந்து ஏவி எதிரிகளை அழிக்க முடியும். இதனால் இந்த ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் போரில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
அமெரிக்காவுக்கு பதிலடியா?
இந்தியா வந்துவிட்டு ஈரானுக்கு திரும்பி சென்ற ஈரானின் டெனா போர்க்கப்பலை இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. இப்படியான சூழலில் தான் ஓமன் வளைகுடாவில் நம் நாடு பலம் வாய்ந்த ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலை நிலைநிறுத்தி உள்ளது. இது பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்த போர்க்கப்பல் களமிறக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓமன் வளைகுடாவில் ஏன்?
இருப்பினும் தற்போதைய சூழலில் இந்த நடவடிக்கை என்பது நம் நாட்டுக்கு வரும் போர்க்கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், முன்னெச்சரிக்கைக்காகவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவில் இருந்து செல்லும் கப்பல்களுக்கும், இந்தியாவுக்கு வரும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேவைப்பட்ட அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களை வெளியேற்றவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும் தான் இந்த ஐஎன்எஸ் சூரத் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம்












Click it and Unblock the Notifications