உச்சமடைய போகும் பெட்ரோல் - டீசல் விலை.. ஈரான் போரால் பெரிய ஷாக்.. பின்னணியில் 2 காரணம்.. போச்சே
டெல்லி: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளன. இதனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளை பெரியளவில் பாதிக்கப்பட உள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் சூப்பர் டேங்கர் கப்பல்களில் வாடகையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் தாக்கம் நேரடியாக இருக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட படைபிரிவுகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது.
ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியமே பெரும் பதற்றத்தில் உள்ளது.
இன்று 4வது நாளாக போர் தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் தனது நாட்டுக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்த ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கியமானது.
ஏனென்றால் இந்த ஜலசந்தி வழியாக தான் உலகில் 5ல் ஒருபங்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. புரியும்படி கூற வேண்டும் என்றால் ஒருநாளில் உலகம் முழுவதும் நடக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஈராக், உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா, சீனா உள்பட வெளிநாடுகளுக்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது ஈரான் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளதால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட உள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட உள்ளது. இதன கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது முதல் காரணமாகும்.
2வது காரணம் என்னவென்றால் கச்சா எண்ணெயை சுமந்து செல்லும் சூப்பர் டேங்கர் கப்பல்களின் வாடகை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தைக் குழுவின் தகவல்படி மத்திய கிழக்கில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல ஒரு கப்பலுக்கு 400,000 அமெரிக்கா டாலருக்கு மேல் செலவாகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக 2 விஷயங்கள் நடந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரிக்க உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும். அதுவும் தற்போது கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தொடர்வதால் பெட்ரோல், டீசல் விலை கண்மூடித்தனமாக உயரும் என்கின்றனர் நிபுணர்கள்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications