Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்த இந்தியாவும் திணறப்போகுது.. ஈரான் போரால் இந்தியா சந்திக்க போகும் 10 பிரச்சனைகள்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. மத்திய கிழக்கில் சுமார் 1 கோடி இந்தியர்கள் உள்ள நிலையில் இந்த போர் நீடித்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு குறித்த 10 முக்கிய பாயிண்ட்டுகளை இங்கு பார்க்கலாம்.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போரை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த போர் 5வது நாளாக இன்று உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஈரானை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றன.

Iran War

இதனால் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது. இங்கு அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளதால் ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது.

இந்த போரின் தாக்கத்தால் நம் நாடு பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. ஐந்தாவது நாளாக ஈரானில் போர் நடக்கும் நிலையில் இது தொடர்ந்து நீடித்தால் நம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளின் தாக்கத்தை எளிய விளக்கமாக இங்க பார்க்கலாம். இதுதொடர்பாக 10 முக்கிய பாயிண்ட்டுகள் வருமாறு:

1. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப்பாதையை மூடி உள்ளது. இந்த வழிப்பாதை வழியாக தான் தினமும் உலக தேவையில்20 சதவீதம் வரை கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கிறது. தற்போது அது முடங்கி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்.

2. இந்தியாவின் தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதியில் 2.5 மில்லியன் முதல் 2.7 மில்லியன் பேரல் வரை ஹோர்முஸ் ஜலசந்தி வழிப்பாதை வழியாக தான் வருகின்றன. ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு வருகிறது. இப்போது அது தடைப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலைகள் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. அதேபோல் நம் நாட்டிலும் விலை உயரும் அபாயம் உள்ளது.

3. இந்த மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து எல்என்ஜி கியாஸ் வருகிறது. இது தடைப்பட்டுள்ளதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல், எல்என்ஜி கியாஸ் உள்ளிட்டவற்றால் சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். நேரடியாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம். இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்.

4. பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்போது கப்பல் கட்டணங்கள், காப்பீட்டு பிரிமீயங்கள் அதிகரிக்கும். இதுவும் பெட்ரோல், டீசல் விலையை உச்சமடைய செய்யும். இதனால் பிற பொருட்களின் விலையும் உயரும். அதோடு நாட்டில் பணவீக்கத்துக்கு வழிவகுக்கும்.

5. கச்சா எண்ணெய் , எல்என்ஜி கியாஸ் மட்டுமின்றி உரங்கள், அலுமினியம் உள்ளிட்டவை மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் முதல் தொழில்துறையினர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா உதவியுடன் ஈரானில் சபாஹர் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானை தவிர்த்து மும்பையில் இருந்து ஈரான் வழியாக மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தம் செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் உள்ளது. இங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் அது நம் நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

6 . நம் நாட்டில் இருந்து சவூதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு பாஸ்மதி அரிசி அதிகளவில் செல்கிறது. நம் நாட்டின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் 50 சதவீதம் வரை இந்த நாடுகளுக்கு தான் செல்லும். இதனால் அந்த வர்த்தகம் பாதிக்கப்படும்.

7. நம் நாட்டில் இருந்து மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் வழியாக தான் பொருட்கள் எலக்ட்ரானிக் உள்பட பிற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டின் ஏற்றுமதியில் சுமார் 56 சதவீதம் இந்த வழிப்பாதையில் தான் செல்கிறது. இதனால் நம் நாட்டின் ஏற்றுமதியில் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாற்று வழிப்பாதையை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. இது சரக்கு கப்பல்களின் பயண நேரத்தை கூடுதலாக 2 முதல் 3 வாரங்கள் வரை ஆக்கலாம்.

8. 2026ம் நிதியாண்டின் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதி 4.1 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் அங்கு ஏற்றுமதி செய்ப்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிகளவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ள நிலையில் அந்த வர்த்தகம் பாதிக்கப்படும்.

9.. மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் நம் நாட்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கும் ஏராளமானவர்கள் வந்து சென்றனர். இதனால் வருமானம் அதிகரித்தது. தற்போது அதற்கு பிரச்சனை வந்துள்ளது.

10. மேலும் ஈரான் போரால் பங்கு சந்தைகள் சரிவை எதிர்கொண்டுள்ளன. மேலும் அந்திய செலவாணி சந்தையிலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 91.32 ஆக சரிந்துள்ளது.
----

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+