தயவு செய்து இதை மட்டும் பண்ணிடாதீங்க.. ஸ்மார்ட் போன் யூசர்களுக்கு ஐ.ஆர்.சி.டிசி கொடுத்த வார்னிங்!
டெல்லி: வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஐ.ஆர்.சி.டி.சி பெயரில் போலியான செயலிகளின் லிங்க் பரவுவதாகவும் பயனர்கள் இதை தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களில் இன்ஸ்டால் செய்ய வெண்டாம் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி பயனர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் என்று பார்த்து விட்டு தான் வேறு வழியை நாடுவோம். முன்பெல்லாம் ரயில் டிக்கெட் புக் செய்வது என்றால் ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களுக்கு சென்று அங்குள்ள படிவத்தை நிரப்பி டிக்கெட் புக் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் நீண்ட லைனில் நின்று பல நிமிடங்கள் காத்துக்கிடக்க நேரிடும். சில நேரங்களில் மணிக்கணக்கில் கூட ஆகும்.

ஆனால், இப்போது அந்த அளவு கஷ்டப்பட வேண்டியது இல்லை. இணைய பயன்பாடு பெருகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் நமது செல்போனில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக சில நிமிடங்களில் டிக்கெட் புக் செய்து விடலாம். இந்த வசதியை இன்னும் எளிமைப்படுத்தும் விதமாக செயலியும் உள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐபோன் இயங்கு தளங்களில் இந்த செயலியை டவுன்லோடு செய்து அதன் மூலமாக டிக்கெட்டுகளை ஈசியாக புக் செய்ய முடியும். ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் பெரும்பாலானவர்களிடம் கண்டிப்பாக ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த செயலி இருக்கும். இதெல்லாம் இருக்கட்டும்...இங்கே விஷயத்திற்கு வருவோம்..
ஐ.ஆ.சி.டி.சி கடந்த சில தினங்களாக தனது யூசர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதில், ஐ.ஆர்.சி.டி.சி செயலி போலவே போலியான செயலியின் ஏபிகே பைல்ஸ் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த செயலியை தவறுதலாக யாரும் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த எச்சரிக்கையை ஐ.ஆ.சி.டி.சி விடுத்துள்ளது. ஐ.ஆர்.சி.டி சி விடுத்துள்ள அறிவுறுத்தலில் , "irctcconnect.apk," என போலியான சாஃப்டேவேர் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி போன்ற தோற்றத்தில் சில கிரிமினல்கள் உங்களின் முக்கியமான தகவல்களை திருடக்கூடும்.அதாவது யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தரவுகளை திருட வாய்ப்புள்ளது. இதனால் பணத்தை இழக்கவும் நேரிடும். எனவே இதுபோன்ற போலியான செயலிகளை கவனமாக பார்த்து புறக்கணிக்க வேண்டும்.
எப்போதும் பிளே ஸ்டோரில் ஐ.ஆர்.சி.டி.சியின் அதிகாரப்பூர்வ " IRCTC Rail Connect' என்ற செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி ஒருபோதும் பயனர்களிடம் யூசர்நேம், பாஸ்வேர்டு, ஒடிபி, டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு விவரங்களை கேட்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications