பாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்
திமுக பணம் தந்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுக்க உள்ளதாக தெரிகிறது
டெல்லி: டெல்லி வட்டாரத்தில் திமுகவுக்கான புதிய ஸ்கெட்ச் போடப்பட்டு வருவதாக பரபரப்பு அடிபடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்காக பணம் கொடுத்த விவகாரத்தை விஸ்வரூபமாக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறதாம்.
வழக்கம் போல இதை நேரடியாக பாஜக செய்யாது என்று சொல்கிறார்கள். மாறாக சசிகலா புஷ்பாவை வைத்து திமுகவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து சிக்கலை வலுவாக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
மத்திய அரசே அதாவது பாஜகவே நேரடியாக இறங்கினால் திமுக குறி வைக்கப்படுவதாக திசை திருப்பப்படும் என்பதால் சசிகலா புஷ்பா மூலம் சிக்கலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அஸ்திரங்கள்
எப்போதெல்லாம் தமிழக அரசியலில் சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறதோ, அப்போதெல்லாம் சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி வருகிறது பாஜக தலைமை. அதன்படிதான், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதிமுக, திமுகவுக்கு எதிரான அஸ்திரங்களை அவ்வப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்து புகார் தந்து கொண்டே இருக்கிறார்.

சசிகலா புஷ்பா
சில சமயங்களில் அமித்ஷாவைகூட நேரில் சந்தித்து புகார் தர முன்வருவார் இவர்! சமீபத்தில்கூட, வைகோவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று துணை குடியரசு தலைவரிடம் முறையிட்டவர்தான் இந்த சசிகலா புஷ்பா. இப்போது ஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களம் இறக்குகிறது பாஜக!

பண பரிமாற்றம்
தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகள் அதாவது திமுக, அதிமுக, தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு சில்லறையை சிதற விடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். பெட்டி கை மாறிடுச்சு என்று சொல்வதே இவர்களை வைத்துத்தான். இது காலம் வரை கரன்சியாகவோ அல்லது வேறு ரூபத்திலோ இந்த பணப் பரிமாற்றம் நடந்து வந்தது.

காவல்துறை
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக தரப்பிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், கொங்கு தேசிய கட்சிக்கும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். இப்படிச் செய்ததால் அதை தேர்தல் ஆணையத்திலும், காவல்துறையிலும் கணக்கு காட்ட வேண்டியதாகி விட்டது. இதுதான் சிக்கலாகி விட்டது.

கம்யூனிஸ்ட்கள்
வழக்கமாக எல்லாக் கட்சிகளும் செய்யும் வேலையைத்தான் திமுகவும் செய்துள்ளது. என்ன வித்தியாசம் என்றால் திமுக வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக ஒளிவுமறைவில்லாமல் செய்துள்ளது. மற்ற கட்சிகளும் அதை ரகசியமாக செய்துள்ளன. இதுதான் வித்தியாசம். ஆனால் இப்போது திமுக கொடுத்த பண விவகாரத்தை வைத்து அதற்கு ஏதாவது சிக்கல் கொடுக்க முடியுமா என்று எதிரி கட்சிகள் யோசிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த விவகாரத்தில் போகப் போகத்தான் தெரியும்.. இது திமுகவுக்கு சாதகமாக முடியுமா அல்லது பாதகமாகுமா என்று.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications