வில்லனே காங்கிரஸ் தான்.. "INDIA"வுக்கு இருக்கும் பெரிய சிக்கலே இதுதான்.. உடைத்த இந்தியா டுடே சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆஃப் தி நேஷன் அமைப்பின் புதிய கருத்துக் கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதில் தேசிய அரசியல் களத்தில் பாஜக கூட்டணி ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளது. மறுபுறம் இந்தியா கூட்டணிக்குக் கணிசமான வாக்கு சதவிகிதம் இருந்தாலும் கூட அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தான் பலவீனமான லிங்க் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே மற்றும் சிவோட்டர்ஸ் அமைப்பு இணைந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மூட் ஆஃப் தி நேஷன் என்ற சர்வேயை நடத்தும். அதன்படி இப்போது புதிய சர்வே வெளியாகியுள்ளது. அதில் இன்று லோக்சபா தேர்தல் நடந்தால், பாஜக கூட்டணியே மிகப் பெரியளவுக்கு வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி மீதான இமேஜும் சிறப்பாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Is Congress Weakest Link in INDIA Bloc What does India today Mood of Nation 2026 survey says

சர்வே சொல்வது என்ன

பாஜகவின் என்டிஏ கூட்டணி 47% வாக்கு சதவீதத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2025 சர்வேயிலும் பாஜகவுக்கே இதே அளவுக்கு வாக்கு சதவிகிதமே கிடைத்திருந்தது. அதே சமயம், இந்தியா கூட்டணி 39% வாக்குகளைப் பெறுமாம். இது 2025 கணிப்பை விட இரண்டு சதவீதம் குறைவாகும். பிற கட்சிகள் தங்கள் வாக்குகளை 14%ஆக உயர்த்தி உள்ளது.

வெல்லும் இடங்களைப் பொறுத்தவரை ஆளும் என்டிஏ கூட்டணி 352 இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2025 சர்வேயை விட 28 இடங்கள் அதிகமாகும். மறுபுறம் இந்தியா கூட்டணி 2025 சர்வேயுடன் ஒப்பிடுகையில் 26 இடங்களை இழந்து 182 இடங்களைப் பெறும் என்றும், மற்ற கட்சிகள் வெறும் 9 இடங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது..

பிரச்சினையே காங்கிரஸ் தான்

கட்சி வாரியாக பார்க்கும்போது, பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதை இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறது. பாஜக தனது 41% வாக்கு சதவீதத்தைத் தக்கவைத்துக்கொள்வதோடு, அதன் இடங்களின் எண்ணிக்கையை 27 அதிகரித்து 287ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் காங்கிரஸ் வாக்குகள் ஒரு சதவீதம் குறையுமாம். 20% வாக்குகளை மட்டுமே பெற்று, வெறும் 80 இடங்களையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது..

பலவீனம்

அதாவது இந்தியா கூட்டணிக்கு இன்னும் கணிசமான வாக்குப் பலம் இருந்தாலும், அதன் முக்கிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் பலவீனமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பிராந்தியக் கட்சிகள் 39% வாக்குகளையும் 176 இடங்களையும் தக்க வைத்துக் கொள்கின்றன. இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் ஆகஸ்ட் 2023இல் 41% ஆக உயர்ந்தது. 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு சுமார் 40% ஆக இருந்தது. எனினும், ஜனவரி 2026 இல் இது 39% ஆகக் குறைந்துள்ளது.

மோடி vs ராகுல்

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடையே நல்ல இமேஜ் இருக்கிறது. ஜனவரி 2026இல், சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கு ஆதரவாக 55% பதிலளித்தவர்கள் குறிப்பிட்டனர். மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பல ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறினாலும், மோடியுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியே உள்ளார். ஜனவரி 2022இல் 7%ஆக இருந்த அவரது ஆதரவு இப்போது 27%ஆக உயர்ந்துள்ளது. ராகுல் காந்தியை மக்கள் அதிகம் ஏற்கத் தொடங்கி இருந்தாலும், அது காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஒரு தீர்க்கமான தேர்தல் வெற்றியைத் தரவில்லை என்று அந்த சர்வே தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+