அப்போ நேரம் இருக்குமா? கண்டுகொள்ளாத டெல்லி.. எடப்பாடி போடும் "பிளான் பி".. எப்படிங்க நடந்தது?
டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அவ்வளவு வெற்றிகரமானதாக இல்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர், பிளான் பி ஒன்றை களமிறக்க உள்ள உள்ளதாக எடப்பாடிக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.
மிகுந்த நம்பிக்கையோடு.. பிரச்சனையை எல்லாம் சரி செய்து விடலாம் என்று உற்சாகத்தில் .. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று பெயரை தாங்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். ஆனால் டெல்லி சென்ற எடப்பாடிக்கு நினைத்தது எதுவும் பெரிதாக நடக்கவில்லை.
எடப்பாடி நினைத்தது பெரிதாக நடக்கவில்லை என்று சொல்வதை விட.. அவர் நினைத்தது எதுவும் சுத்தமாக நடக்கவே இல்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

சந்திப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி செல்கிறார் என்பதே வெளியே சொல்லப்பட்ட செய்தி. ஆனால் உண்மையில் எடப்பாடியின் டெல்லி பயணத்திற்கு பின் வேறு சில முக்கிய காரணங்கள் இருந்தன. முக்கியமாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும். அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வைத்து இருந்தார்.

என்ன பிளான்?
எடப்பாடிக்கு டெல்லி பாஜகவிற்கு இடையில் கடந்த சில நாட்களாக உறவு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது டெல்லி மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். எஸ்பி வேலுமணி, காமராஜ் உள்ளிட்ட பலர் டெல்லியால் குறி வைக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் பல்வேறு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனர். இதை பற்றி விவாதிக்க எடப்பாடி டெல்லி சென்றதாக கூறப்பட்டது.

வேறு என்ன காரணம்
அதேபோல் அதிமுக தொடர்பான சில வழக்குகள் தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் உள்ளன... இதில் டெல்லி "தலைகளின்" ஆதரவு தனக்கு கிடைக்குமா என்று கேட்பதற்காக எடப்பாடி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு பேருமே "நேரம் இல்லை" என்று கூறி எடப்பாடிக்கு நோ சொல்லியதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு உள்ளிட்ட பல விஷயங்களில் பிசியாக இருப்பதால் உங்களை பார்க்க முடியாது என்று எடப்பாடிக்கு சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

என்ன பிளான்?
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிளான் பி ஒன்றை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் எடப்பாடிக்கும் அதிமுகவின் சில தலைவர்களுக்கும் இடையில் அவ்வளவு நெருக்கமான நட்பு இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைகளுடன் நட்பை ஏற்படுத்த எடப்பாடி முயல்வார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக மூலம் டெல்லிக்கு தூது விடும் வகையில் சில தமிழ்நாடு பாஜக தலைகளை எடப்பாடி வரும் நாட்களில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி பயணம் மீண்டும்
அதோடு எப்படிங்க நேரமே இல்லாமல் போனது. ஒரு 10 நிமிடம் நம்மை பிரதமர் சந்தித்து இருக்கலாமே என்ற வருத்தத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம். இதனால் மீண்டும் டெல்லிக்கு செல்லும் திட்டத்திலும் எடப்பாடி இருக்கிறாராம். குடியரசுத் தலைவராக இன்று திரௌபதி பதவி ஏற்றபின் வரும் நாட்களில் பிரதமர் மோடியை சந்திக்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளார் கூறப்படுகிறது. அதாவது இன்னும் சில நாட்கள் கழித்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்கலாம்.
Recommended Video

அப்பாயிண்ட்மெண்ட்
சில நாட்களுக்கு பின் நேரம் கேட்டால் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி தரப்பு கருதுகிறதாம். இதனால் மீண்டும் எடப்பாடி டெல்லி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றே கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு டெல்லி ஆதரவு இருப்பதாக நிறைய தகவல்கள் வருகின்றன. டெல்லி - ஓபிஎஸ் இடையே நல்ல அண்டர் ஸ்டான்டிங் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த இரண்டு தரப்பின் உறவை முறிக்கவே எடப்பாடி மீண்டும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications