பத்தோடு பதினொன்றாக ஒரு பதவி.. அப்போ அமைச்சர் போஸ்ட் என்னாச்சு? அண்ணாமலை கைக்கு வரும் பெரிய பவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. பவர்புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலைக்கு தேசிய பதவி

தமிழ்நாடு பாஜக பிரிவு தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றதிலும் சரி அல்லது கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு சென்றதிலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது..

annamalai

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்வோம். தேசிய அளவில் அவரை பயன்படுத்திக்கொள்வோம் என்று அமித் ஷா கூறி உள்ளார். இதன் மூலம் தேசிய பணிக்கு அண்ணாமலை செல்வதை அமித் ஷா உறுதி செய்துள்ளார். இந்த நிலையில்தான் அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். இன்னும் உண்மையான அறிவிப்புகள் வரவில்லை.

பத்தோடு பதினொன்றாக ஒரு பதவி

தற்போது வரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அண்ணாமலையுடன் சேர்த்து வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருக்கும் கட்சி தலைமை், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியிருக்கிறது. சசிகலா புஷ்பா, சரத்குமார் போன்றவர்களுக்கும் இதே பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

இது அதிகாரம் மிக்க பதவி எல்லாம் கிடையாது. கவுரவம் மிக்க பதவி. முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டத்திற்கு இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் இந்த பதவிக்கு தனியாக பொதுக்குழு கூட்டம் தவிர்த்து வேறு பெரிய அதிகாரங்கள் கிடையாது.


அப்போ அமைச்சர் பதவி ?

இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில்... அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதாவது கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா வழியாக இவர் எம்பி ஆகி அமைச்சர் ஆக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து இவர் எம்பி ஆக வாய்ப்பு இல்லை. அதற்கு அதிமுக ஆதரவு தேவை. அதனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராக முடியாது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து இவர் எம்பி ஆகி.. அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரங்களில் மத்திய அமைச்சர்கள் பெரிய அளவில் மாற்றப்பட உள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் 4-5 பேர் வரை மாற்றப்பட உள்ளனர். அதேபோல் 2-3 பேர் வரை இலாக்கா மாற்றம் பெற உள்ளனர். அடுத்த வருடம் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான ஜாதி கால்குலேஷன்கள் அடிப்படையில் அமைச்சர் பதவி மாற்றப்பட உள்ளது.

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து சிலர் அமைச்சர்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதை மனதில் வைத்தே பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள். பவர்புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+