ஹமாஸை வீழ்த்த.. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புகிறதா இந்தியா? வெளியுறவுத்துறை எடுத்த அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே 6வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் மோதல் வலுப்பெற்று வரும் நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பாலஸ்தீனத்தின் ஹமாஸை வீழ்த்த இந்தியா சார்பில் ராணுவ ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படுமா? என்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பரபரப்பான பதிலளித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. இங்கு ஹமாஸ் அமைப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் முன்னொரு காலத்தில் காசா என்பது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதனால் காசா பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற நினைக்கிறது.

Is India would be providing help to Israel in the form of weaponry? Foreign ministry says this

இதற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. வெறும் 20 நிமிடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகள் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போர் தொடங்கியதாக கூறி இஸ்ரேலும் காசா பகுதியை முற்றுகையிட்டு வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இருதரப்புக்கும் இடையே இன்று 6 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. தற்போது வரை 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காசா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருட்டில் மக்கள் வசிக்கும் நிலையில் உணவு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தார். எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது. இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக இந்தியா நிற்கும் என அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ‛‛இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் வடிவில் உதவி செய்யுமா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அரிந்தம் பாக்சி கூறியதாவது:

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதே இப்போது எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது . இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அதில் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் மருத்துவமனையில் உள்ளனர். காசாவில் 4 பேரும், மேற்குக் கரையில் 12 பேரும் உள்ளனர்.

நாங்கள் அங்குள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை ‛ஆபரேஷன் அஜய்' மூலம் விமானத்தில் மீட்க உள்ளோம். இஸ்ரேலில் இருந்து இன்று இந்தியா வரும் விமானத்தில் 230 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்'' என்றார்.

இந்தியாவை பொறுத்தமட்டில் பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் ரஷ்யா, இஸ்ரேலிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மேலும் இஸ்ரேலும் கூட ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அதோடு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் அயர்ன் டோம் உள்ளிட்ட அமைப்புகளை இஸ்ரேல் வைத்துள்ளது. இந்த அமைப்புகளை மீறி தான் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் தற்போதைய சூழலில் இந்தியா ராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுத்துள்ள நிலையில் அமெரிக்கா ராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+