டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு கதை சொல்லட்டா சார்.. ட்விட்டரை கலக்கும் ராகுல் காந்தி.. முக்கிய அறிவிப்பு முன்பாக ஒரு க்ளூ

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர்களாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்கும் முன்பாக அதுகுறித்து ட்விட்டரில் க்ளூ கொடுத்து அசத்தினார்.

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத்தை அறிவிப்பதா, ஆதித்யராத்ய சிந்தியாவை அறிவிப்பதா என்பதில் ராகுல் காந்திக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இருவரிடமும் தொடர் ஆலோசனைகளை டெல்லியில் தனது இல்லத்தில் வைத்து நடத்தி வந்தார் ராகுல் காந்தி.

ஒருவழியாக நேற்று இரவு ராகுல் காந்தி ஒரு முடிவை எடுத்தார். கமல்நாத்தை முதல்வராக அறிவிப்பது என்பதுதான் அந்த முடிவு.

பொறுமை, பொறுமை

பொறுமை, பொறுமை

ஆனால் மத்திய பிரதேச காங்கிரஸ், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதை அறிவிக்க வைப்பது என்று முடிவு செய்த ராகுல் காந்தி, அதற்காக ஒரு ட்வீட்டை வெளியிட்டார். கமல்நாத் மற்றும் ஆதித்யராத்ய சிந்தியா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, காலமும், பொறுமையும்தான், மிக பலமான இரு போர்வீரர்கள் என கூறியிருந்தார்.

கமல்நாத்

கமல்நாத்

அவர் கூறியதை போலவே, நள்ளிரவில்தான் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கமல்நாத் பெயர் அதிகாரப்பூர்வமாக முதல்வர் என அறிவிக்கப்பட்டது. இதைத்தான் பொறுமையாக இருக்க அவர் கூறியதாக பலருக்கும் பிறருக்கு புரிந்தது.

ஒருங்கிணைந்த வண்ணங்கள்

இந்த நிலையில் இன்று மதியம், ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியிலுள்ள சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இருவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து, "ராஜஸ்தானின் ஒருங்கிணைந்த வண்ணங்கள்" என்று கூறி ட்வீட் செய்தார். எனவே ராஜஸ்தான் முதல்வர் தேர்விலும் முடிவு எட்டப்பட்டதாக கருதப்பட்டது.

முதல்வர், துணை முதல்வர்

முதல்வர், துணை முதல்வர்

இந்த ட்வீட் வெளியிட்ட 1 மணி நேரத்தில், ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வண்ணங்கள் என்பதன் அர்த்தம், இப்படி இருவரை உச்ச அதிகாரத்தில் அமர்த்துவதுதானா என்பது அதன்பிறகுதான் பலருக்கும் புரிந்தது. ராகுல் காந்தியின் இந்த ட்வீட்டுகள் அவரது ட்விட்டரை நெட்டிசன்கள் தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. யார் வேண்டுமானாலும், தனிப்பட்ட மெசேஜ் (DM) அனுப்பும் வசதியும் அவரது ட்வீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Is Rahul Gandhi comes to a conclusion over Rajasthan CM candidate selection? his Tweet showing the mood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X