"இந்த டிரக் உங்களுடையதா.. இவ்வளவு மோசமான ரோட்டிலும் செல்கிறதா?" ஆனந்த் மகேந்திராவை மிரள வைத்த வீடியோ
டெல்லி: பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் மிக ஆபத்தான முறையில் டிரக் ஒன்று அபாயகரமான மலைச்சாலையில் கடக்கிறது. இது உங்கள் டிரக்கா, உண்மையில் இப்படி செல்கிறதா என்று என்னிடம் கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா நெட்டிசன்களின் விருப்பமான தொழிலதிபர். பல்வேறு உற்சாகமாளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார்.

உதவி செய்பவர்கள் தொடங்கி, வித்தியாசமான மனிதர்கள் வரை பலரையும் ஆனந்த் மகேந்திரா அடையாளம் காட்டியிருக்கிறார், அதே போல் கார், பேருந்து, இருசக்கர வாகனம் உள்பட ஆட்டோ மொபைல் சார்ந்து யாராவது கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருவார்.
மிக ஆச்சர்யமான பல்வேறு தொழில்நுட்பங்களை ஆனந்த் மகேந்திரா வெளியிட்டிருக்கிறார். பல சாகச பிரியர்களை வீடியோக்கள், ஆபத்தான பயணங்கள், அசாத்தியமான டிரைவிங் திறமைகள் போன்ற வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மகேந்திரா.

இந்நிலையில் ஆனந்த் மகேந்திரா வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் மிக ஆபத்தான முறையில் டிரக் ஒன்று அபாயகரமான மலைச்சாலையில் கடக்கிறது. ஒரு டிரக் நிற்கிறது. அதை முந்தியபடி இன்னொரு டிரக் பல பொருட்களுடன் செல்கிறது. அதுவும் மிக ஆபத்தான முறையில் செல்கிறது.
இந்த வீடியோவை பார்த்த ஆனந்த் மகேந்திராவிற்கு உண்மையிலேயே இப்படி இருக்க வாய்ப்பு உண்டா, இந்த வீடியோ உண்மை தானா என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவத அவர் வெளியிட்ட கேப்சன் என்னவென்றால், " இது உங்கள் லாரிகளில் ஒன்றா?? இது உண்மையிலேயே 'ஆஃப்-ரோட்டில்' போகிறதா" என்ற தலைப்புடன் வீடியோ அனுப்பபட்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்
இதற்கு பதில் அளித்துள்ள பல நெட்டிசன்கள், சார் இப்படியெல்லாம் வண்டி ஓட்டனும்னா அது வீடியோ கேம்ல தான் சாத்தியம், நிஜத்துல சாத்தியமே இல்லை என்று கூறியுள்ளனர். போலியான வீடியோ என்று கூறியிருக்கிறார்.அதேநேரம் சில நெட்டிசன்கள் உண்மை என்று கூறியதுடன், அந்த டிரைவரின் திறமையை பாராட்டுகிறார்கள். நீங்களே அந்த வீடியோவை பாருங்கள், போலியா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
I was sent this with the caption: Is that one of your trucks?? It’s truly going ‘off-road.’ 😃 pic.twitter.com/4rVwKllGLU
— anand mahindra (@anandmahindra) May 4, 2023
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications