என்னது.. அலோபதி மீது நம்பிக்கை இல்லாதவர் சுகாதாரத்துறை அமைச்சரா? வைரலாகும் மன்சுக் மண்டாவியா ட்வீட்
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மன்சுக் மண்டாவியா (Mansukh Mandaviya) அறிவிக்கப்பட்டுள்ளார். கொரோனா காலத்தில், மக்களை காக்க தவறியதற்காக கடும் விமர்சனங்களை சந்தித்தது சுகாதாரத்துறை.
Recommended Video
இந்த நிலையில்தான் சுகாதாரத் துறையின் அமைச்சராக இருந்த ஹர்ஷவர்த்தன், பதவியை ராஜினாமா செய்ய பணிக்கப்பட்டார். இதையடுத்து,தான் மன்சுக் மண்டாவியா அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்சுக் மண்டாவியா உரம் மற்றும் ரசாயனத்துறை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தவர். குஜராத்தில் இருந்து இவர் ராஜ்யசபாவிற்கு தேர்வாகி அமைச்சரானவர்.

மக்கள் எதிர்பார்ப்பு
குஜராத் தேர்தலை மனதில் வைத்து இதுபோல புரமோஷன் தரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், டாக்டர்.ஹர்ஷவர்த்தனாலேயே திறம்பட கையாள முடியாத துறையை, மன்சுக் மண்டாவியா திறம்பட கையாளுவாரா என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள். இந்த நிலையில்தான், மன்சுக் மாண்டாவியா வெளியிட்ட ஒரு பழைய டுவிட்டர் பதிவு இப்போது வைரலாக சுற்றி வருகிறது.

நெட்டிசன்கள் கேள்வி
சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளவர், அலோபதி மருத்துவத்தை நம்பாதவரா என்ற கேள்விகளை இது எழுப்பியுள்ளது. இந்த பழைய டுவிட்டுக்கு இப்போது பலரும் ரிப்ளை செய்கிறார்கள். அலோபதி கொரோனா விஷயத்தில் தோற்றதாக நினைத்தால், ஆயுர்வேதா மருந்துகள், கொரோனாவை ஒழித்துக் கட்டி விட்டதா பதில் கூறுங்கள் என்று கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.

அலோபதி மீது நம்பிக்கை தேவை
ஆயுஷ் அமைச்சகம் என்ற ஒன்று இயற்கை மருத்துவத்தை ஊக்கப்படுத்த செயல்படுகிறது. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சகம் என்பது, அலோபதி மருத்துவத்தையே பெரும்பாலும் சார்ந்து இயங்கும். ஏனெனில், இது பரிசோதனை செய்து அறிவியல் பூர்வமாக ரிசல்ட் கிடைக்கப்பெறும் மருத்துவ முறையாகும். எனவே அலோபதியை பலரும் நம்புகிறார்கள்.

முக்கியமான காலகட்டம்
சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளவர், அதுவும், கொரோனா போன்ற உலக பெருந்தொற்று காலத்தில் பொறுப்பேற்றுள்ளவர், அதுவும், ஏற்கனவே பதவி வகித்தவர் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று புதிதாக நியமனம் செய்யப்பட்டவர், அலோபதி மீது நம்பிக்கையில்லாதவரா என்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications