பசுக்களை விற்பதாக சொல்வதா.. மன்னிப்பு கேட்காவிட்டால் மேனகா காந்தி மீது வழக்கு: இஸ்கான் எச்சரிக்கை
டெல்லி: பசுக் கூடங்களை பராமரித்து வரும் இஸ்கான் நிறுவனம் மாடுகளை கசாப்பு கடைக்கு விற்பனை செய்வதாக பாஜக எம்பி மேனகா காந்தி குற்றம்சாட்டிய நிலையில் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக இஸ்கான் பதிலடி கொடுத்துள்ளது.
கிருஷ்ண விழிப்புணர்வுக்கான சர்வதேச அமைப்பு (International Society for Krishna Consciousness - ISKCON) அமைப்பு இந்தியாவை தளமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்கள், பசு பராமரிப்பு கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பின் கீழ் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளார்கள். கிருஷ்ண பக்தி குறித்த விழிப்புணர்வை இஸ்கான் ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளிலும் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் இஸ்கான் அமைப்பின் தொண்டர்களாக இணைந்த வண்ணம் உள்ளனர்.

இஸ்கான் அமைப்பு மீது பாஜக எம்பி மேனகா காந்தி குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். தமிழ்நாட்டின் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்த விலங்குகள் ஆர்வலரான மேனகா காந்தி இஸ்கான் நிறுவனம் பசுக்களை இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கூறி உள்ளார். இதுகுறித்து பேசி தன்னுடைய சமூக வலைதளத்தில் மேனகா காந்தி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், "இந்தியாவிலேயே மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம் இஸ்கான் என்றும் அவர்களுக்கு அதிக நிலங்கள் உள்ளன என்றும் அரசின் பல்வேறு உதவிகளை அது பெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஒரு முறை நான் இஸ்கான் நிறுவனம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆனந்த்பூரில் பராமரித்து வரும் பசுக் கூடத்திற்கு சென்றேன். அங்கு பால் தராத பசுக்கள், கன்றுகளே இல்லை. அப்படியென்றால் அவை அனைத்தும் விற்கப்பட்டு உள்ளதாகவே அர்த்தம். இஸ்கான் நிறுவனம் இறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்கிறது. அவர்கள் சாலைகளில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என பாடிக்கொண்டே செல்கின்றனர். பாலையே தங்களுடைய வாழ்நாள் முழுக்க நம்பி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் அளவுக்கு வேறு யாரும் மாடுகளை கசாப்பு கடைகளுக்கு அனுப்பவில்லை." என்று தெரிவித்தார்..
இதனிடையே மேனகாவின் குற்றச்சாட்டுகளை இஸ்கான் திட்டவட்டமாக நிராகரித்தது. ISKCON அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ், சமூக ஊடக தளமான Xல் வெளியிட்ட அறிக்கையையில் "மேனகா காந்தியின் ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். இஸ்கான் பசு மற்றும் காளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் முன்னணியில் உள்ள அமைப்பாகும். பசுக்களும், காளைகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் இஸ்கான் அமைப்பால் பராமரிக்கப்படுகின்றன. கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்கப்படுவதில்லை. இஸ்கான் இந்தியாவிற்குள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான உறுதிப்பாட்டுடன் உள்ளோம். இஸ்கானின் பசு பராமரிப்பு மையங்களில் உள்ள பல பசுக்கள் கைவிடப்பட்ட, காயமடைந்த அல்லது படுகொலையிலிருந்து காப்பாற்றப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட உயிரினங்களாகும். மேலும், பசு வழிபாடு மற்றும் பராமரிப்பு மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்கும் நோக்கத்துடன், விவசாயிகள் மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு முறையான பசு பராமரிப்பு வழிகாட்டுதல்களை ISKCON புது முயற்சியாக எடுத்து வருகிறது.
இஸ்கான் நடத்தும் பல கோசாலைகள் உயர் பராமரிப்பு தொழில்நுட்பம் கொண்டவை. எனவேதான் பல அரசுகள் மற்றும் கோசாலை சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளன. அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்." இவ்வாறு யுதிஷ்டிர் கோவிந்த தாஸ் தெரிவித்தார்.
மேனகா காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்திய ISKCON அமைப்பு, தங்கள் பசு பராமரிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை பொது வெளியில் வெளியிட்டுள்ளது. மேலும் தவறு இருந்தால் உள்ளூர் நிர்வாகங்கள் அதை சொல்லட்டும் என்று அரைகூவல் விடுத்துள்ளது இஸ்கான். இதனிடையே இஸ்கான் அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ISKCON கொல்கத்தா அமைப்பின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராதாராமன் தாஸ், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இஸ்கான் செல்ல உள்ளதை உறுதி செய்துள்ளார். அதாவது, மேனகா காந்தி தனது தவறான பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்று ராதாராமன் ட்வீட் செய்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications