வாஜ்பாய் VS மோடி.. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் நேர் எதிர் நிலைப்பாடு..வாஜ்பாய் சொன்னது என்ன? வீடியோ
டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் யுத்தத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் 1977 ல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது. மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கார், மோட்டார் சைக்கிள், பாராசூட்டில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. பாலஸ்தீனம் உடனான போர் தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து தாக்குதலை தொடங்கி உள்ளார். முதலில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகளை அந்நாட்டு படை வீரர்கள் குறிவைத்து சுட்டு வீழ்த்த தொடங்கினர்.
அதன்பிறகு காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலின் ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் பகுதிகளை நோக்கி குண்டுகளை வீசி வருகின்றன. இதனால் இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 4 வது நாளாக இருதரப்புக்கும் இடையே யுத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசினார். அப்போது அவர் போர் சூழல் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா நிற்கும் என அறிவித்தார்.
இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-ன் பார்வை வெவ்வேறாக உள்ளதாக தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ள நிலையில் பாலஸ்தீன நிலத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என வாஜ்பாய் பேசிய வீடியோ பரவி வருகிறது.
‘For permanent peace in the Middle-East, Israel must vacate Palestinian land it has illegally occupied.’
— Sudheendra Kulkarni (@SudheenKulkarni) October 8, 2023
-- Atal Bihari Vajpayee, when he became India’s External Affairs Minister, at a rally in Delhi in March 1977. 2/3 pic.twitter.com/Fildbp9qiD
இந்த வீடியோ என்பது 1977ம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வாஜ்பாய் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. பிரசார் பாரதியின் இந்த வீடியோவில் வாஜ்பாய் கூறியதாவது: ‛‛ஜனதா கட்சி ஆட்சி அமைந்தால் அது அரேபியர்களை ஆதரிக்காது. இஸ்ரேலை ஆதரிக்கும் என கூறப்பட்டது. ஆனால் மொராஜி தேசாய் அரசின் நிலைப்பாட்டை நான் தெளிவுப்படுத்த நினைக்கிறேன். மேலும் அரசு மீதான தவறான புரிதலை அகற்றவும் நான் விரும்புகிறேன்.
மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலத்தை விடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலத்தை விட்டு வெளியேற வேண்டும். மேலும் எந்த சூழலிலும் ஆக்கிரமிப்பு பலனை ஆக்கிரமிப்பாளர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. ஏனென்றால் விதிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனைக்கு தீர்வு என்பது அவசியமாகும். இதற்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக ஒப்படைப்பதே சிறந்ததாகும்'' என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications