இந்தியா ‛மேப்’பை கவனிச்சீங்களா? முதுகில் குத்திய இஸ்ரேல்? ஜம்மு காஷ்மீர் யாருக்கு? வெடித்த சர்ச்சை
டெல்லி: இஸ்ரேல் தனது இணையதளத்தில் பதிவேற்றிய இந்தியா தொடர்பான வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் யாருக்கு சொந்தம்? என்பதில் கடும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இஸ்ரேல் இணையதளத்தில் இருந்து இந்தியாவின் வரைபடம் நீக்கப்பட்டது.
காசாவின் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி விட்டது. இந்த போருக்கு நடுவே தான் இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையேயான மோதல் என்பது தொடங்கியது. தற்போது இந்த மோதல் என்பது இஸ்ரேல் - ஈரான் மோதலாக உருவாகி உள்ளது.

இஸ்ரேல் நாட்டுடன் ஈரான் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் கூட ஈரான் தற்போது நேரடியாக களமிறங்கி உள்ளது. ஈரான் 180 முதல் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது இந்த மோதல் என்பது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த போர் நடவடிக்கை மற்றும் மோதலுக்கு நடுவே நம் நாடு தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் நம் நாடு தொடர்ந்து உறுதியாக உள்ளது. அந்த வகையில் இஸ்ரேலுக்கு நம் நாடு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இன்று பெரிய விவாதம் கிளம்பியது. இதற்கு இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நம் நாட்டின் வரைபடத்தை தவறாக பதிவிட்டதே காரணமாகும். அதாவது இஸ்ரேலின் இணையதள பக்கத்தில் நாடுகளின் வரைபடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன. அதில் நம் நாட்டின் வரைபடம் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஜம்மு காஷ்மீர் நம் நாட்டுக்கு சொந்தமானது.
ஆனால் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்பது போல் இந்தியாவின் ‛மேப்' இஸ்ரேலின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. பலரும், ‛‛இந்தியா தொடர்ந்து இஸ்ரேலுக்கு துணையாக நிற்கிறது. ஆனால் இஸ்ரேல், இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கிறதா?. இந்தியா விவகாரம் வரும்போது ஜம்மு காஷ்மீரில் கவனம் செலுத்த வேண்டும்'' என கூறினர்.
இதை உடனடியாக கவனித்த இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார், ‛‛இது இணையதள எடிட்டரின் தவறு. தவறை கவனித்து கூறியதற்கு நன்றி. தவறான இந்த படம் நீக்கப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். இதையடுத்து இந்த சர்ச்சை என்பது முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications