என் பிரெண்ட போல யாரு மச்சான்.. இந்தியாவுக்கு இஸ்ரேல் சொன்ன சூப்பர் #friendshipday வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாப்படும் நிலையில் இஸ்ரேல் சார்பில் ஷோலே படத்தில் இடம்பெற்ற "யே தோசி டீ" பாடலின் பின்னணி இசையுடன் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நெகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடியும் பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நண்பர்கள் பலரும் தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

israel says happy friendship day wishes to india by sholay movie music

இதை முன்னிட்டு இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சார்பில், வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்தில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு பின்னணி இசையாக ஷோலே படத்தில் உள்ள யே தோசி டீ என்ற பாடலின் இசை ஒலிக்கிறது. அந்த வீடியோவுடன் எங்களுடைய வளர்ந்து வரும் வலிமையான நட்பால் எங்களிடையே பார்டனர்ஷிப் இன்னும் அதிக உயரங்களை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ட்வீட்டை பார்த்து நெகிழ்ந்த பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமருக்கு பதிலுககு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+