தீபாவளி நேரத்தில் இது சரியா.. கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கிறதா?.. ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: தீபாவளி நேரத்தில் விலைவாசி உச்சத்தில் இருப்பது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வு காரணமாக தினமும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயரும் போது பொதுவாகவே சரக்கு வாகனங்களின் போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இது விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்.

வாகனங்கள்
இதனால் தற்போது காய்கறிகள், மளிகை பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்களிலும் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வரும் நிலையில் விலைவாசி உயர்வு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
கடந்த 7 நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மாறாமல் தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. டெல்லி பெட்ரோல் விலை லிட்டருக்கு 110.04 ரூபாய்க்கும், மும்பையில் 115.85 ரூபாய்க்கும், சென்னையில் 106.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் டீசல் 99.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் டீசல் 102.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் டீசல்107.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கண்டனம்
தீபாவளி நேரத்தில் விலைவாசி உச்சத்தில் இருப்பது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் செய்துள்ள ட்வீட்டில், இது தீபாவளி நேரம். விலைவாசி உயர்வு என்பது ஜோக் கிடையாது. விலைவாசி உயர்வு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. பிரதமர் மோடியின் அரசுக்கு இந்த மக்கள் மீது கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனம்
நாடு முழுக்க மக்களின் வருமானம் அதிகரித்து உள்ளது இதனால் விலைவாசி உயர்வை பற்றி மக்கள் யாரும் குற்றம் சொல்லவில்லை. வருமான உயர்வை நீங்கள் ஏற்றுக்கொண்டால் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசால் திட்டங்களை இலவசமாக வழங்க முடியாது. என்று மத்திய பிரதேச பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் விலைவாசி உயர்வு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications