8-வது சம்பள கமிஷன்.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய மேஜர் அப்டேட்.. எந்த நேரமும் நடக்கலாம்
டெல்லி: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க சம்பள கமிஷன் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 7வது சம்பள கமிஷன் 10 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது, அதன்படியே 2016ம் ஆண்டு முதல் சம்பளம் உயர்த்தப்பட்டது. இப்போது 10 ஆண்டு நெருங்கிவிட்ட நிலையில், 8-வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பு இதுவரை மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. ஆனால் எந்த நேரத்திலும், அரசிதழில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
என்ன தான் ஐடி வேலையில் லட்சங்களில் சம்பளம் தந்தாலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசு வேலைகளில் சேருவதற்கு உள்ள கிராக்கி இன்று வரை குறையவே இல்லை.. ஏனெனில் ஐடி துறையில் சம்பளம் அதிகம் என்றாலும், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது.

எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம். அதேபோல் 45 வயதுக்கு மேல் வேலையில் தொடர்வார்களா என்பது பெரிய கேள்வியாக இருக்கும். அப்படியே இருந்தாலும் சம்பளம் நினைத்தது போல் இருக்காது. ஐடி உள்பட தனியார் வேலைகளை பொறுத்தவரை இளமை காலத்தில் ஏற்றமாகவும், முதுமைக்காலத்தில் கடினமாகவும் மாறிவிடும். அதுமட்டுமல்ல மன அழுத்தமும், வேலை பளுவும் அதிகமாக இருக்கும்.
அரசு வேலையை மக்கள் விரும்ப காரணம்
ஆனால் அரசு வேலையில் அப்படி இல்லை.. நிரந்தரமான வேலை.. மாதம் தவறாமல் சம்பளம், நிறைய விடுமுறை, வருடம் வருடம் ஊதிய உயர்வு, திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பதவி அடிப்படையில் ஊதிய உயர்வு, பணி நிறைவு பெற்றவுடன் மாதா மாதம் ஓய்வூதியம், கடைசி காலம் வரை ஓய்வூதியம் வாங்கி வாழ்க்கை துணையுடன் நிம்மதியாக வாழலாம். ஒருவேளை அரசு ஊழியர் மரணம் அடைந்தாலும் வாழ்க்கை துணைக்கு அவர் உயிருடன் இருக்கும் காலம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இவ்வளவு சலுகைகள் அரசு வேலையில் உள்ளது. மத்திய அரசு வேலை என்றாலும் சரி, மாநில அரசு வேலை என்றாலும் சரி, இதுதான் யதார்த்தம்.
சம்பள கமிஷன் எப்படி
அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம் ஆகும். இப்படி சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க சம்பள கமிஷன் அமைக்கப்படும். அந்த வகையில், முதல் சம்பள கமிஷன் 1946-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தன் பரிந்துரைகளை 1947-ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது.
10 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது
அப்போது முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு வந்தது. கடைசியாக 7-வது சம்பள கமிஷன் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் 23.55 சதவீத உயர்வு கிடைத்தது.
மத்திய அரசு ஒப்புதல்
இந்நிலையில் 8வது சம்பள கமிஷன் அமைத்து அதனை 2026ல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இது நடைமுறையாகும். எனவே தான், இந்த ஆண்டு மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 50 லட்சம் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும், 60 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு மற்றும் அலவன்சுகளை திருத்தியமைக்க 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியாமல் இருந்தது.

அரசிதழில் வெளியாகவில்லை
ஏனெனில் 8-வது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பு இதுவரை மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. ஆனால் எந்த நேரத்திலும், அதுகுறித்த அரசிதழ் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அப்படி வெளியானதும், இந்த கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ராணுவ அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளிடமும் இந்த 8வது சம்பள கமிஷன் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கும்.
எப்போது நடைமுறைக்கு வரும்
அனைத்து தரப்பு ஆலோசனை முடிந்தது அறிக்கை தயாராக முழுமையாக ஓராண்டு ஆகும். எனவே இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 8வது சம்பள கமிஷன் அறிக்கை ரெடியாகிவிடும். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால். 2027 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு சம்பள கமிஷன் அமைத்தால், மாநில அரசும் அமைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும். இதன்படியே மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும்.
8வது சம்பள கமிஷன் ஊதிய உயர்வு எவ்வளவு
8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு சராசரியாக 20% முதல் 34% வரை ஊதிய உயர்வு இருக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த உயர்வு, ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் (Fitment Factor) பொறுத்து மாறுபடும் என்கிறார்கள். ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்பது, பழைய அடிப்படை ஊதியத்தை புதிய ஊதியத்திற்கு மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பெருக்கி (multiplier) ஆகும்.
அதிகபட்ச சம்பளம் எவ்வளவு இருக்கும்
8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது, அமைச்சரவைச் செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளின் அதிகபட்ச அடிப்படை ஊதியம் ₹2.5 லட்சத்தில் இருந்து ₹6.75 லட்சம் வரை அதிகரிக்கலாம் என கூறப்பபடுகிறது. எனினும் இது வெறும் கணிப்பு தான் .. சம்பள கமிஷனின் அதிகாரப்பூர்வ அறிக்கை வந்தால் தான் உண்மையான சம்பள உயர்வு எப்படி இருக்கும் என தெரியவரும்.
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications