ஏன் பாஜகவை ஆதரிக்கிறாய்? ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்தர் ஜடேஜா. இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
அதேபோல் இவர் இங்கிலாந்து செல்லும் இந்தியாவின் 50 ஓவர் உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார். இவர் குடும்பத்தில் அரசியல் காரணமாக பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
|
பாஜக ஆதரவு
கிரிக்கெட் வீரர் ஜடேஜா தற்போது பாஜகவை ஆதரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் டிவிட்டரில் வெளியிட்டார். ஜடேஜாவிற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி சேர்ந்தார்
ஜடேஜா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ரிவபாவை திருமணம் செய்துகொண்டார். ரிவபா முதலில் ஜாதி அமைப்பான கர்னி சேனா அமைப்பில் இருந்தார். இவரும் சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய சண்டை
ஜடேஜா பாஜகவை ஆதரிப்பதால் அவரின் குடும்பத்தில் பெரிய சண்டை நடந்து இருக்கிறது. ஜடேஜா அப்பாவும், சகோதரியும் ஜடேஜாவின் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார்கள். அப்பா அனிருத் சிங், சகோதரி நைனா இருவரும் ஜடேஜாவுடன் வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள்.

காங்கிரசில் இணைப்பு
இந்த நிலையில் திடீர் திருப்பமாக அனிருத் சிங், நைனா இருவரும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். ஜடேஜாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். இதனால் ஜடேஜாவின் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications