இந்தியா செய்த மேஜிக்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க 2 கப்பல்களுக்கு மட்டும் அனுமதி எப்படி? ஜெய்சங்கர் பகிர்ந்த சீக்ரெட்
டெல்லி: ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்தது. இதனால், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்ச ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையே நடந்து வரும் போர் இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள முக்கிய கட்டமைப்புகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது.

எண்ணெய் வினியோகம் பாதிப்பு
இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. போருக்கு இடையே உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்தது. தினமும் ஆயிரக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்லும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விரைவில் குஜராத் வந்தடையும்
ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்கள் சுமார் ஒரு லட்சம் டன் சமையல் எரிவாயுவை ஏற்றிச் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கப்பல்கள் விரைவில் குஜராத் மாநில துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்து வரும் நிலையில், இந்திய கப்பல்களுக்கு அனுமதி கிடைத்தது எப்படி என்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறுகையில், "ஈரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வர உதவி செய்துள்ளது. நான் தற்போது அவர்களுடன் பேசி வருகிறேன், இந்த பேச்சுவார்த்தை சில முடிவுகளைத் தந்துள்ளது" என்றார்.
மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்று
ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:- இந்திய கொடியுடன் வரும் கப்பல்களுக்கு நீண்ட கால ஏற்பாடு (blanket arrangement) என எதுவும் இல்லை. ஒவ்வொரு கப்பலின் பயணமும் தனித்தனியாக தான் பேசப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து இதற்காக ஈரான் எதுவும் பெறவில்லை. இந்தியா - ஈரான் இடையே உறவு உள்ளது. தற்போது நடைபெறும் மோதல் என்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றாகும்.
இப்போதுள்ள நிலை என்பது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அங்கு இன்னும் பல கப்பல்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ளது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" என்றார்.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பை சந்தித்துள்ள நாடுகள், போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதனை பல நாடுகளும் நிராகரித்துள்ளன.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications