அமெரிக்கா vs சீனா.. உலக அரங்கில் சத்தமின்றி நடக்கும் மாற்றம்! ஜெய்சங்கர் சொன்ன முக்கிய விஷயங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கா சமீப காலமாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, சர்வதேச அரங்கில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையிலான போட்டி, சீனாவின் எழுச்சி மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களது சொந்த நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை உலக அரசியலின் புதிய போக்கை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

62வது முனிச் பாதுகாப்பு மாநாடு இப்போது ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். அங்கு பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இப்போது சர்வதேச சூழல்கள் வேகமாக மாறி வருவதாகவும் அவை உலகின் போக்கையே மாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

US Is Isolating Itself US Jaishankar

அமெரிக்கா

குறிப்பாக, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மிக பெரிய மாற்றம் தற்போதைய உலக சூழலின் முக்கிய அம்சமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம் என சொல்லிவிட முடியாது என்றும், அது அமெரிக்காவே தேர்ந்தெடுத்த நிலைப்பாடு என்றும் ஜெய்சங்கர் கூறினார். இதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே உலக அரங்கில் இருந்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய உலக சூழலின் மற்றொரு முக்கிய அம்சமாக சீனாவின் எழுச்சியை ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். உலக உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கை சீனா கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் பொருளாதார வலிமை அரசியல் செல்வாக்காகவும் மாறி வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்கா vs சீனா

அவர் மேலும், "அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது மிக தீவிரமான போட்டி நிலவுகிறது. இந்த போட்டி இரு நாடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாட்டிடமும் இருக்கும் செல்வாக்கு என்பது இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர சார்பு தொடர்கிறது.

வளர்ந்து வரும் நாடுகள்

வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர சக்தி கொண்ட நாடுகள் தங்களது சொந்த நலன்கள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் செயல்பட தொடங்கியுள்ளது. அவை அதிக தன்னிறைவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவும் ஆத்மநிர்பர் நோக்கி நகர்ந்து வருவதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் மற்ற நாடுகளுடன் பார்டனர்ஷிப்பை விரிவுபடுத்தி, அபாயங்களை குறைக்கும் முயற்சிகளில் வளரும் நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட துறைகளில் மட்டும் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையும் அதிகரித்து வருகிறது.

இணைந்து செயல்பட வேண்டும்

அதாவது இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட அவர்கள் எல்லா விஷயங்களிலும் ஒரே கருத்தை கொண்டிருக்க தேவையில்லை. பொதுவான நலன்கள் இருந்தாலே இணைந்து செயல்பட முடியும். எந்த துறைகளில் ஒரே கருத்து இருக்கிறதோ.. அந்த துறைகளில் மட்டும் இணைந்து செயல்படலாம். குவாட், பிரிக்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு உதாரணமாக உள்ளது.. இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் உள்ளிட்ட இணைப்பு திட்டங்கள் இதுபோலவே செயல்படுத்தப்படுகிறது" என்றார்.

பிரிக்ஸ் அமைப்பில் பல்வேறு நாடுகள் இணைந்து வருவதை குறிப்பிட்ட அவர், தனித்தனி நாடுகளின் குரலைவிட இதுபோன்ற கூட்டு அமைப்பின் குரல் வலிமையானதாக இருக்கும் என்றார். மேலும், சர்வதேச அளவில் அமைதியை கொண்டு வர இந்தியா முன்னெடுத்த முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+