ஜல் ஜீவன் திட்ட முறைகேடு.. மோடி கடும் கோபம்.. குஜராத், தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களுக்கு அபராதம்
டெல்லி: பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்துள்ளதை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.129 கோடி அபராதம் விதித்து அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், நிதி முறைகேடுகள் மற்றும் தரக்குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இல்லம்தோறும் குடிநீர் இணைப்பு : திட்டம் தொடங்கியது எப்படி?
இந்தியக் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குழாய் நீர் இணைப்பை வழங்குவதே ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். 'இல்லம்தோறும் குடிநீர் இணைப்பு' என்ற முழக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை 2019 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார்.

ஆரம்பத்தில் இத்திட்டத்தை 2024-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பல வீடுகள், பல கிராமங்களுக்கு திட்டம் போய் சேர வேண்டியதிருந்ததால், அதன் காலக்கெடு 2028 வரை நீட்டிக்கப்பட்டது. இது கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதியளிக்கும் இந்தத் திட்டத்திற்கு, பிரதமரின் நேரடி கவனம் செலுத்தி வந்தார். இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரக்கட்டுப்பாடு மிக முக்கியம் என்று மத்திய அரசு விரும்பியது.
முறைகேடு நடந்தது எப்படி? பிரதமர் ஏன் கோபமானார்
இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் பணிகள் தீவிரமாக நடந்தபோது, மத்திய அரசின் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தனர். அப்போதுதான் சில மாநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் மற்றும் தர மீறல்கள் நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதில் நிதி துஷ்பிரயோகம், திட்டச் செயல்பாட்டு விதிகளில் மீறல், மேலும் முக்கியமாக, போடப்பட்ட குழாய்களின் தரத்தில் குறைபாடு ஆகிய பிரச்சனைகள் அப்படமாக மத்திய அரசின் கவனத்திற்கே சென்றது,
இந்த முறைகேடுகள் குறித்த விவரங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் கடும் கோபம் அடைந்தார். ஏனெனில், மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்த் திட்டத்தில், நிதி அல்லது தரத்தில் எந்தவிதமான மீறல்களையும் சகித்துக்கொள்ள முடியாது என்பதில் அவர் உறுதி தெரிவித்தார்.
குஜராத், தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பு
பிரதமர் மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, திரிபுரா, அஸ்ஸாம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.129 கோடியே 67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்துக்கு மட்டும் ரூ.120 கோடியே 65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பிற மாநிலங்களுக்கான அபராதத் தொகை:
ராஜஸ்தான்: ரூ.5.34 கோடி
மகாராஷ்டிரா: ரூ.2.02 கோடி
திரிபுரா: ரூ.1.22 கோடி
கர்நாடகா: ரூ.1.01 கோடி
அஸ்ஸாம்: ரூ.5.08 லட்சம்
தமிழ்நாடு: ரூ.3 லட்சம்
இதில், அபராதத் தொகையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து உடனடியாக வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக ரூ.12 கோடியே 95 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.6.65 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பல அதிகாரிகள் கைது
இந்த முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 20 மாநிலங்களில் முறைகேடுகள் தொடர்பான 607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 62 துறை அதிகாரிகள், 969 ஒப்பந்ததாரர்கள், 153 மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்கள், ஒரு முன்னாள் அமைச்சர், 10 அதிகாரிகள், 8 ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படைத் திட்டத்தில் இவ்வளவு பெரிய அளவில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டிருப்பது, திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!











Click it and Unblock the Notifications