கோபத்தில் இருந்தேன்.. நேற்று முதல்நாள் துப்பாக்கி வாங்கினேன்.. ஜாமியா கொடூரத்தை விளக்கிய ராம் பகத்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபால் நேற்று முதல்நாள்தான் உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி வாங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபால் நேற்று முதல்நாள்தான் உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி வாங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Jamia Firing: I bought the Gun from my hometown day before yesterday says, Ram Gopal

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது.நேற்று இந்த போராட்டத்தில் ராம் பகத் கோபால் என்ற நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.

    இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய ராம் பகத் கோபாலுக்கு 18 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 18 வயது ஆக இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இவர் மீது தற்போது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதனால் இன்று காலை ராம் கோபால் சிறுவர் கோர்டில் டெல்லியில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு போலீசார் இவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார்கள். இதனால் தற்போது ராம் கோபாலுக்கு 14 நாட்கள் கடுங்காவல் கஸ்டடி கொடுக்கப்பட்டுள்ளன.

    அதே சமயம் இவரின் வயதிலும், வயது குறித்து இவர் அளித்து இருக்கும் ஆவணங்களிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. இதனால் bone ossification test எனப்படும் மருத்துவ முறை மூலம் இவரின் வயதை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக இவர் ஆர்எம்எல் மருத்துவமனைக்கு நாளை கொண்டு செல்லப்படுவார்.

    போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்த போராட்டம் காரணமாக தனக்கு கோபம் வந்து இப்படி செய்ததாக கூறியுள்ளார். இந்த நாட்டு மக்கள் திண்டாடுகிறார்கள். அதனால் இவர்களை சுட வேண்டும் என்று சென்றேன். என்னிடம் 10 ஆயிரம் ரூபாய் இருந்தது.

    அதில் உத்தர பிரதேசத்தில் என் ஊருக்கு அருகிலேயே நாட்டு துப்பாக்கி வாங்கினேன். நேற்று முதல்நாள்தான் இந்த துப்பாக்கி வாங்கினேன். என்னிடம் நிறைய துப்பாக்கிகள் இதுபோல் இருக்கிறது, என்று ராம் பகத் கோபால் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+