டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் சுட சொன்னார்.. மறுநாளே சுட்ட ராம் பகத் கோபால்.. 3 பாஜக தலைவர்களை கைது செய்க..மாணவர்கள் கோரிக்கை

பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் சர்மா, பர்வேஷ் வெர்மா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டை அடுத்து பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் சர்மா, பர்வேஷ் வெர்மா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது. அவர்கள் சார்பாக நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.இந்த மாணவர், காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்க எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யுங்க.. அரசு கொறடா கோரிக்கை.. புதுவையில் பரபரப்பு எங்க எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யுங்க.. அரசு கொறடா கோரிக்கை.. புதுவையில் பரபரப்பு

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த சம்பவத்திற்கு இரண்டு நாள் முன்புதான் பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் போராட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அங்கு போராட்டம் செய்யும் போராட்டக்காரர்களை சுட வேண்டும். அவர்கள் எல்லோரையும் சுட்டு வீழ்த்த வேண்டும். மொத்தமாக ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் செய்பவர்களை சுத்தம் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரின் பேச்சு பெரிய சர்ச்சையானது.

    மோசமான பேச்சு

    மோசமான பேச்சு

    அதேபோல் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, ஷாகீன் பாக் பகுதியில் போராடும் எல்லோரும் குற்றவாளிகள். அங்கிருக்கும் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள். அவர்கள் உங்கள் வீட்டிற்கு உள்ளே வருவார்கள். உங்கள் தங்கைகள், மனைவிகளை வன்புணர்வு செய்வார்கள். மோடிதான் உங்களுக்கு உதவ வேண்டும். மோடிக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் நீங்கள் மோடியிடம் உதவி கேட்க முடியாது என்று குறிப்பிட்டார்.

    பாஜக தலைவர்

    பாஜக தலைவர்

    அதேபோல் இன்னொரு பக்கம் பாஜக இளம் தலைவர் கபில் மிஸ்ராவும், இதேபோல் ஷகீன் பாக் மிக சிறிய பாகிஸ்தான். அங்கு போராடும் மக்களை அடித்து விரட்ட வேண்டும். அவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டார். இவர்களின் இந்த தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுதான், நேற்று துப்பாக்கி சூடு நடந்ததற்கு காரணம். அவரை போன்ற இளைஞர்களை தங்கள் பேச்சுக்கள் மூலம் தூண்டி விடுகிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கைது செய்ய கோரிக்கை

    கைது செய்ய கோரிக்கை

    இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்று டெல்லியில் உள்ள மாணவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது. ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் ஷாகீன் பாக் ப்குதியில் போராட்டம் செய்து வரும் மக்கள் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். நேற்று டிவிட்டர் முழுக்க இவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jamia Firing: Peoples asks to arrest Parvesh Thakur, Kapil Sharma, and Anurag Thakur after Ram Gopal Shooting yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X