கையில் குண்டடி.. கொஞ்சமும் பயமின்றி மீண்டும் எழுந்து நின்ற காஷ்மீர் மாணவர்.. தலைநகரில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த போது, அதில் காயம் அடைந்த மாணவரை மருத்துவமனைக்கு செல்ல கூட போலீசார் அனுமதிக்கவில்லை. அவர் கையில் குண்டடி பட்ட பின்பும் துப்பாக்கி சூடு நடத்திய ராம் கோபால் முன் தைரியமாக எழுந்து நின்றார்.

    ஒரு மோசமான விஷம பிரச்சாரம் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டெல்லி உதாரணமாக மாறி வருகிறது. இஸ்லாமியர்கள் மீது இருக்கும் கோபம் காரணமாக, டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்த ஒருவர் நேற்று இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக நேற்று போராட்டம் நடந்தது. அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

    என்ன போலீஸ்

    இவர் மாணவர்களை துப்பாக்கியால் சுடும் சம்பவம் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாணவர்களை நோக்கி சுட்ட நபரும் வலதுசாரி கொள்கை கொண்டவர்தான். இவர் பெயர் ராம் பகத் கோபால்.பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார். இவர் கையில் காயத்துடன் ராம் கோபால் முன் தைரியமாக எழுந்து நின்றார்.

    இணையம் வைரல்

    இணையம் வைரல்

    காயம் அடைந்த இந்த மாணவர், காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இவரை போலீசார் சிகிச்சை மேற்கொள்ள கூட அனுமதிக்கவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கையில் குண்டடி பட்டதும் இவர் கதறி அழுதார். கையில் முழுக்க இவருக்கு ரத்தமாக வந்தது. அதே ரத்த காயத்துடன் மருத்துவமனை நோக்கி ஓடினார். ஆனால் அந்த வழியில் போலீசார் தடுப்பு சுவர்களை போட்டு மறைத்து இருந்தனர்.

    அனுமதிக்கவில்லை

    அனுமதிக்கவில்லை

    அங்கே இருந்த தடுப்பு சுவர்களை தாண்டி போக மட்டுமே போலீஸ் அனுமதித்தது. மாறாக அந்த சுவர்களை அங்கிருந்து அகற்ற போலீஸ் அனுமதிக்கவில்லை. மாணவர் கேட்டதற்கும், சுவர்களை எடுக்க முடியாது. அதன் மீது ஏறி உள்ளே வாருங்கள். சுவர்களை எடுக்க மாட்டோம் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் அந்த மாணவர் கையில் ரத்த காயத்துடன், அந்த தடுப்பு சுவர் மீது ஏறினார். அதன்பின் இன்னொரு பக்கம் இருந்த மாணவர்கள் அவரை அழைத்து சென்றனர்.

    சிகிச்சை செய்தனர்

    சிகிச்சை செய்தனர்

    இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது கையை தாக்கிய குண்டு, கையை தாக்கி, உள்ளே சென்று வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரின் கைக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய ராம் பகத் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரையே போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த பல நாட்களாக இவர், இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+