உங்கள் உடல் நடுங்குகிறது.. அந்த பயம் பிடிச்சிருக்கு.. ஜாமியா மாணவர்களை விமர்சித்த பாஜக இளம் தலைவர்!

டெல்லி போராட்டக்காரர்களுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் பயம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று டெல்லி மாடல் டவுன் தொகுதி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இதோ உங்கள் சுதந்திரம்.. மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்

    டெல்லி: டெல்லி போராட்டக்காரர்களுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் பயம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று டெல்லி மாடல் டவுன் தொகுதி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    சிஏஏவிற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்த ஒருவர் நேற்று இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக நேற்று போராட்டம் நடந்தது. அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் நேற்று உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இவர் பெயர் ராம் பகத் கோபால்.

    துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    இந்த துப்பாக்கி சூட்டிற்கு மூன்று பாஜக மூத்த தலைவர்களின் பேச்சுகளும் காரணம் என்று பார்க்கப்டுகிறது. தங்களுடைய டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள்தான் மக்களை தூண்டிவிடும் விதமாக பேசினார்கள். முக்கியமாக பாஜகவின் மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகிய மூன்று பேர்தான் மக்களை தூண்டி விட்டார்கள். முக்கியமாக அனுராக் தாக்கூர் அங்கு போராடும் நபர்களை சுட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    மூன்று பேர்

    மூன்று பேர்

    இந்த நிலையில் இந்த மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். டெல்லியில் உள்ள மாணவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது. ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று டிவிட்டர் முழுக்க இவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் செய்து வரும் மக்கள் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    இந்த நிலையில் மாணவர்களின் இந்த கோரிக்கை குறித்து பாஜக மூத்த உறுப்பினர் மற்றும் வேட்பாளர் கபில் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் இதை ஏற்றுக்கொள்கிறோன். போராட்டம் செய்பவர்களின் இந்த கோரிக்கையை நான் மிகப்பெரிய மரியாதையாக பார்க்கிறேன். ஆம், அவர்கள் எல்லோரும் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். அவர்களின் இந்த பயம் எங்களுக்கு பிடித்துள்ளது. உங்களின் பயம் என்னை கவர்கிறது.

    பயம்

    பயம்

    நீங்கள் இப்படித்தான் பயப்பட வேண்டும். அரசை துண்டிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டும். உங்களின் வயிறு எரிவதை எங்களால் பார்க்க முடிகிறது, என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த ஆணவமான பேச்சு பலரையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், மாபெரும் மக்கள் போராட்டத்தை இப்படியா பேசுவது. இதை ஏற்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+