ஒன்னுகூட கீழே விழல.. பாகிஸ்தான் F16 போர் விமானத்தை நடுவானிலேயே வழிமறித்து சுட்டு வீழ்த்திய இந்தியா
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்தியா ராணுவம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.. அந்தவகையில், ஆபரேஷன் சிந்தூர் மூலமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்தியா, அங்கிருந்த 9 பயங்கரவாதி முகாம்களை தாக்கி அழித்தது. உடனே பாகிஸ்தானும், எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது உடனடியாக தாக்குதலை நடத்தியது...

ட்ரோன் தாக்குதல்
ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியபோதும், இந்திய ராணுவம் அதனை முறியடித்துவிட்டது.. இந்திய ராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த பதிலடியை தந்திருந்தது.
இன்று மறுபடியும் ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி தந்து அதனையும் முறியடித்துவிட்டது.. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகிலுள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் போன்ற இடங்களில் குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை இந்திய ராணுவம் முறியடித்து தோற்கடித்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட F16
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான F 16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.. பாகிஸ்தானின் சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த F16 போர் விமானமும், அதேபோல் 2 JF போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு, ஆர்எஸ் புரம், சானி ஹிமாத், உள்ளிட்ட இடங்களில் ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ஏவுகணை தாக்கியதில் மொத்தமாக 8 டிரோன்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. சர்கோதாவிலிருந்து பாகிஸ்தான் போர் விமானம் F 16 புறப்பட்டு ஜம்மு நோக்கி வந்து, ஜம்மு ஏர்போர்ட்டை தாக்கும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மின்சாரம் தடை
பாகிஸ்தானின் ட்ரோன்களும், ராஜஸ்தானின் ஜெய்சார்மல் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது இந்திய ராணுவத்தினரால் தாக்கி அழிக்கப்பட்டன. அதாவது, ஒரு ஏவுகணை, டிரோன் கூட இந்திய மண்ணில் விழவில்லையாம்.. அனைத்தையும் நடு வானிலேயே இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
இதனிடையே, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. .. குறிப்பாக, குஜராத்தின் பூஜ், பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜலந்தர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் கிஷ்த்வார் என்ற பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது.
விமானி கைது
இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய, பாகிஸ்தான் F16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்திய நிலையில், அந்த பாகிஸ்தான் விமானப்படை விமானி உயிருடன் இந்திய ராணுவத்திடம் சிக்கியுள்ளார். பிறகு இந்திய ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.. ஆனால் அநத விமானியின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
விமானத்தில் இருந்து குதித்த பிறகு விமானி காவலில் எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தி ட்ரிப்யூனுக்கு உறுதிப்படுத்தி உளளன.. இது தவிர, ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பாகிஸ்தான் விமானியை இந்தியா உயிருடன் பிடித்ததாக உளவுத்துறை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications