இரவு 8 மணி இருக்கும்! பாகிஸ்தான் டிரோன்கள் பறந்தன! கண் சிமிட்டும் வேளையில் துவம்சம் செய்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை நடத்திய போது என்ன நடந்தது என்பது குறித்து ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் மக்கள் விவரித்தது என்ன என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் உள்ளூர் மக்கள் கூறியிருப்பதாவது: நேற்று இரவு 8 மணிக்கு இருக்கும், அப்போது நாங்கள் 3 அல்லது 4 டிரோன்களை பார்த்தோம். உடனே அவற்றை நம் இந்தியாவின் எல் 70 அடித்து துவம்சம் செய்தது. பாகிஸ்தான் டிரோன்களை அனுப்ப அனுப்ப, இந்தியாவில் வான் பாதுகாப்பு கவசம் அவற்றை அடித்து நொறுக்கியது.

pakistan jammu kashmir

இதுதான் இரவெல்லாம் தொடர்ந்தது. பாகிஸ்தான் செய்தது சரியல்ல. நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. இங்கு பள்ளி பகுதிகள் உள்ளன. வெடி சப்தங்களும் எங்களுக்கு கேட்டன.

அதிகாலையிலும் வெடி சப்தம்

இது அதிகாலை 4.30 மணிக்கும் கேட்டன. ஆனால் நம் படைகளால் அவை அழிக்கப்பட்டன. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நம் படையினர் தயார்நிலையில் முழு விழிப்புடன் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் வைஷ்ணவி தேவி ஜம்முவில் இருக்கிறார். எனவே பயப்பட தேவையில்லை.

கோழைத்தனமான பாகிஸ்தான்

பொதுமக்களை நோக்கி தாக்குவது பாகிஸ்தானின் கோழைத்தனம். அந்த நாட்டிற்கு நம் படைகளை எதிர்க்க துணிவு இல்லை. தீவிரவாதத்தை அடக்காமல் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதே அவர்களுக்கு வேலையாக போய்விட்டது. ஆனால் நமது முப்படையினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் நாம் பெருமைக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

பஹல்காம் தாக்குதல்

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. காஷ்மீரின் பூஞ்ச், சம்பா, ஆர்.எஸ்.புரா, ராஜஸ்தானின் ஜெய்சாலமர், பஞ்சாப்பின் அமிருதசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் தாக்குதலை நடத்தியது.

இந்திய போர் விமானங்கள்

அப்போது நம் இந்திய போர் விமானங்களும் வான் பாதுகாப்பு கவசங்களும் அவற்றை காலி செய்தன. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. வியாழக்கிழமை இரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனைகளை நடத்தினார்.

முப்படைகளுடன் ஆலோசனை

அது போல் இன்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்த போகிறார். இந்த நிலையில் பஞ்சாப் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஜன்னல், கதவுகளின் அருகே நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஜம்மு விரையும் ஒமர் அப்துல்லா

தற்போது ஜம்மு காஷ்மீரின் நிலையை அறிய முதல்வர் ஒமர் அப்துல்லா சென்றுள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி ஆகியவற்றை டிரோன்கள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது. அது போல் பாகிஸ்தானின் எஃப் 16 போர் விமானத்தை ராஜஸ்தான் அருகே இந்தியா வீழ்த்தியது.

காவலர்களுக்கு விடுமுறை

இந்த பதற்றம் நீடித்து வருவதால் எல்லையோர மாநிலங்களில் அரசு ஊழியர்கள், காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இந்தியாவில் உள்ள 8 ஆயிரம் எக்ஸ் கணக்குகளை முடக்க இந்தியா, டிவிட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அவற்றை முடக்க எங்களுக்கு உடன்பாடு இல்லை என எக்ஸ் தளம் தெரிவித்துவிட்டது. மேலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+