Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகனுக்கு ஆதரவு.. சீனுக்குள் வந்த ராகுல் காந்தி! பாஜக தமிழ் கலாச்சாரத்தை தாக்குகிறது என விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்நிலையில், 'ஜன நாயகன்' படத்தைத் தடுப்பதற்காக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முயற்சிக்கிறது என்றும், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ராகுல் காந்தியே நேரடியாக விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருப்பது, காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

Jananaayagan Vijay Rahul Gandhi

ராகுல் காந்தி என்ன சொன்னார்?

"ஜனநாயகன் திரைப்படத்தை தடுப்பதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றிப்பெற மாட்டீர்கள்" என்று கூறியிருக்கிறார். முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தனர்.

கிரஷ் ஜோடங்கர்

தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரஷ் ஜோடங்கர், "விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை சுற்றி எழுந்திருக்கும் சர்ச்சையில், அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருப்பினும், ஒரு திரைப்படத்தை குறி வைப்பதை ஏற்க முடியாது. அரசியல் நோக்கத்திற்காக திரைப்படங்களை குறி வைப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

Jananaayagan Censor Row Rahul Gandhi Slams Centre Calls it an Attack on Tamil Culture

ஜோதிமணி ஆவேசம்

அதேபோல காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, "அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது . ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார். ஜோதிமணியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் "CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!" என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸின் கண்டனம்

இதன் தொடர்ச்சியாக தற்போது ராகுல் காந்தியும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசுக்கு கண்டனம் முழங்கியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த கருத்து, எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் விஜய் உடன் கூட்டணி வைக்க அடி போடுகிறதோ? என்கிற சந்தேகத்தை பரவலாக எழுப்பியிருந்தது. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன் காங்கிரஸ் முந்தியடித்து கண்டனம் தெரிவிக்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

அலட்டிக்கொள்ளாத திமுக

மறுபுறம் ஜனநாயகன் விஷயத்தில் திமுக பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. முதல்வரின் ட்வீட்டும், ஒரே வரியில் முடிந்துவிட்டது. காங்கிரஸின் விஜய் சப்போர்ட் ட்வீட்களையும் உடன் பிறப்புகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால், இது குறித்து கேள்வி எழுப்பும்போது.. பாருங்க முதல்வரே கண்டனம் தெரிவித்திருக்கிறார். நாங்க சொன்னதைதான் ராகுல் காந்தியே சொல்லியிருக்கிறார்.. என்று கூறி சலசலப்புகளுக்கு எண்ட் கார்டு போடுகிறார்கள். இந்த பின்னணியில்தான் ராகுல் காந்தியின் ட்வீட் கவனம் பெற்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+