ஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன "அந்த" திட்டம்.. இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு செக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அந்தமான் நிக்கோபார் தீவுகளை வைத்து சீனாவின் கடற்படைக்கு செக் வைக்க ஜப்பான் அதிரடி திட்டம் போட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து சீனாவிற்கு செக் வைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    India- China Border | சீனாவை கண்காணிக்க Andaman தீவுகளை திறக்க வேண்டும்.. முன்னாள் அதிகாரி

    சீனாவின் கடற்படை பலம் உலகில் எல்லா நாடுகளுக்கும் தெரிந்ததுதான். உலகிலேயே தற்போது மிகப்பெரிய கடற்படையை கொண்ட நாடுதான் சீனா. அமெரிக்காவை விட சீனாதான் அதிக போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கொண்டு இருக்கிறது.

    அதோடு உலகம் முழுக்க சின்ன சின்ன நாடுகளில் கூட சீனா போர் கடற்படை தளங்களை அமைத்து வருகிறது. சீனாவிற்கு வெளியே 45க்கும் அதிகமான போர் கடற்படை தளங்களை சீனா அமைத்து உள்ளது.

    கடந்த 5 வருடம்

    கடந்த 5 வருடம்

    கடந்த ஐந்து வருடமாக சீனா தொடர்ந்து இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கூட சீனா கடற்படை தளங்களை அமைத்து உள்ளது. இன்னொரு பக்கம் தென்சீன கடல் எல்லையில் மலேசியா உடனும் வியட்நாமும் உடனும், அமெரிக்கா உடனும் சீனா மோதி வருகிறது. இன்னொரு பக்கம் கிழக்கு சீன கடல் எல்லையில் ஜப்பான் உடன் சீனா மோதி வருகிறது .

    சீனாவின் நோக்கம்

    சீனாவின் நோக்கம்

    சீனாவின் தற்போதைய குறி எல்லாம் இந்திய பெருங்கடல்தான். எப்போது இந்திய பெருங்கடலில் அத்துமீறலாம் என்பதுதான் சீனாவின் நோக்கமாக உள்ளது. இலங்கை கடல் எல்லையில் இருக்கும் சீனாவின் கடற்படை தளம் என்பதை தாக்குதலுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், இந்திய கடல் எல்லையில் வேறு எங்காவது அத்துமீறலாமா என்று சீனா நினைக்கிறது. வேறு எங்காவது போர் கடற்படை தளங்களை அமைக்கலாமா என்று சீனா திட்டமிட்டு வருகிறது .

    இந்தியாவிற்கு யோசனை

    இந்தியாவிற்கு யோசனை

    இந்த நிலையில் இந்திய கடல் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் இந்தியாவிற்கு ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படை வல்லுநர்கள் முக்கிய திட்டங்களை வழங்கி உள்ளனர். அதில் ஒன்றுதான் அந்தமான் நிக்கோபரை நட்பு நாடுகளுக்கு திறந்து விடுவது. அது என்ன திறந்து விடுவது என்றால், நட்பு நாடுகளுக்கு அந்தமான் நிக்கோபரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தருவது.

    ஆபரேஷன் அந்தமான்

    ஆபரேஷன் அந்தமான்

    இதை ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷினோய் போன்ற கடற்படை வல்லுநர்கள் ஆபரேஷன் அந்தமான் என்று அழைக்கிறார்கள். இந்தியாவிற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்க போகும் திட்டம் ஆகும் இது. அதன்படி அந்தமான் நிக்கோபர் கடல் பகுதியையும், அங்கு இருக்கும் நிலப்பகுதியை விமானப்படையின் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும். இந்தியா தனது நெருக்கமான மூன்று நட்பு நாடுகளுக்கு இதை அளிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

    குவாட் நாடுகள்

    குவாட் நாடுகள்

    ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சீனாவிற்கு எதிராக திரட்ட ஜப்பான் முயன்று வருகிறது. இந்த குழுவிற்கு Quad என்று பெயர். சீனாவிற்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றாக சேர்வதற்கான ஆயத்தமாக இருக்கிறது. இந்த குவாட் நாடுகளின் விமானப்படை மற்றும் கடற்படையை அந்தமான் நிக்கோபார் உள்ளே அனுமதிப்பதுதான் இந்த திட்டம் ஆகும். இந்த நான்கு நாடுகளை மட்டும் அந்தமான் நிக்கோபார் உள்ளே விட வேண்டும்.

    அதிரடி அனுமதி

    அதிரடி அனுமதி

    இந்த திட்டத்தின்படி அந்தமான் நிக்கோபார் கடல்பகுதியில் இந்த நான்கு நாடுகளின் போர் கப்பல்கள், போர் நீர்முழ்கி கப்பல்கள் செயல்பட முடியும். அதேபோல் அந்தமான் நிக்கோபார் உள்ளே போர் விமானங்கள் தரையிறங்க முடியும். இந்திய கடல் பகுதியில் மொத்தமாக சீனாவின் கொட்டத்தை அடக்கும் வகையில் இந்த திட்டத்தை ஜப்பான் மற்றும் அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது.

    அதிரடி பரிந்துரை

    அதிரடி பரிந்துரை

    இந்த கோரிக்கையை இந்தியா மறுக்க வாய்ப்பு இல்லை. இதை இந்தியா மறுக்க காரணம் எதுவும் இல்லை என்று ஜப்பான் கூறியுள்ளது. தென்சீன கடல் எல்லையிலும், கிழக்கு சீன கடல் எல்லையிலும் சீனா அத்துமீறியது போல இந்திய பெருங்கடலில் சீனா அத்துமீற கூடாது. சீனாவை அடக்க ஒரே வழி இது மட்டும்தான் என்று ஜப்பான் கூறியுள்ளது. இதற்கு மாறாக ஜப்பான், ஆஸ்திரேலியா கடல் பகுதியை இந்தியா பயன்படுத்தலாம் என்று ஜப்பான் கூறியுள்ளது.

    எங்கே எல்லாம்

    எங்கே எல்லாம்

    அதன்படி இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா கீழ் வரும் மல்லாக்கா, சுண்டா, ஓம்பாய், கொக்கோஸ் போன்ற தீவுகள் மற்றும் கடல் பகுதிகளை இந்தியா பயன்படுத்தலாம். இதன் மூலம் சீனாவை மொத்தமாக கட்டுப்படுத்தலாம் என்று ஜப்பான் கூறியுள்ளது. அமெரிக்கா இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறுகிறார்கள். இதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை.

    பயிற்சி எப்படி

    பயிற்சி எப்படி

    ஏற்கனவே சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா - ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறது. இன்னும் பல்வேறு ராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளது. இந்தியாவோடு ஜப்பான் நடத்திய இந்த கடற்படை போர் பயிற்சியில் ஜெஎஸ் கஷிமா மற்றும் ஜெஎஸ் ஷிமாயூக்கி (JS Kashima and JS Shimayuki) ஆகிய ஜப்பானின் முன்னணி போர் கப்பல்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் இந்தியா சார்பாக ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் குலிஷ் ஆகிய போர் கப்பல்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+