பொறியியல் படிப்புகளுக்கான.. ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வுகள்.. ஜூலை 20 -25 வரை நடத்தப்படும்!
டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவு தேர்வின் மூன்றாவது கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 25 தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தள்ளி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜேஇஇ தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலையில் மாணவர்களின் வசதிக்காக இந்த கல்வியாண்டில் ஜேஇஇ தேர்வுகள் 4 கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகின்றன.

முதல் இரண்டு கட்ட தேர்வுகள் முடிந்த நிலையில் 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மூன்றாவது கட்ட தேர்வுகள் ஜூலை 20 - 25 தேதி வரை நடத்தப்பட உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடக்க உள்ளன.
இதற்கான அறிவிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் வெளியிட்டார். ஏற்கனவே முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் மார்ச் மாதத்திலும் நடந்துவிட்டன.
அடுத்த கட்ட தேர்வுகள் மே மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஜேஇஇ மூன்றாம் தேர்வுகள் ஜூலை மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி இந்த ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்.
கொரோனா காரணமாக ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மீண்டும் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 6 இரவு 11.50 மணி முதல் ஜூலை 8 இரவு வரை ஜேஇஇ தேர்வு விண்ணப்பங்கள் பெறப்படும்.
அதேபோல் நான்காம் கட்ட ஜேஇஇ தேர்வுக்கு ஜூலை 9 - ஜூலை 12 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு எழுத விருப்பமான மையத்தை தேர்வு நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு வரை தேர்வு செய்யலாம். கொரோனா காலம் என்பதால் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 232ல் இருந்து 334 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை 660ல் இருந்து 828 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications