JEE advanced results: ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் 55 இடங்களை மாணவர்களே பிடித்தனர்! அட!
டெல்லி: ஐஐடி கவுஹாந்தி இன்று ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் ஹைதராபாத் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல்வர் 55 இடங்களை மாணவர்களே பிடித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி பயில்வதற்காக ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறையில் இத்தேர்வை நடத்துகின்றன. இந்த ஆண்டு ஜே இ இ நுழைவுத்தேர்வை ஐஐடி கவுகாத்தி நடத்தியது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜே இ இ மெயின்ஸ் தேர்வுகளை எழுத 6.03 லட்சம் மாணவர்கள், 2.56 லட்சம் மாணவிகள், 3 திருநங்கைகள் என மொத்தம் 8.60 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் 290 நகரங்கள், வெளிநாடுகளில் 18 நகரங்களில் நடந்த இத்தேர்வை 8.24 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வை எழுதினர்.
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு 2023 தேர்வு கடந்த ஜூன் 4ஆம் தேதி இரண்டு தாள்களாக நடைபெற்றது. இதை சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 11ஆம் தேதி இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இறுதி விடைத்தாள் விவரங்களும் வெளியாகியுள்ளது.
தேசிய அளவிலான இந்த நுழைவுத்தேர்வில் ஐஐடி ஐதராபாத் மண்டலத்தைச் சேர்ந்த வவிலாலா சித்விலாஸ் ரெட்டி என்பவர், 360க்கு 341 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களில் 6 பேர் ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.
பெண்களைப் பொருத்தவரை, ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்த நயாகாந்தி நாக பவ்யா ஸ்ரீ 298 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 56வது இடத்தை பிடித்துள்ளார். இந்த அண்டு ஹைதராபாத் மண்டலத்தில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications