ஜார்கண்டை மொத்தமாக தட்டி தூட்டிய இந்தியா கூட்டணி.. ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட்போல் கருத்துக் கணிப்பு
டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், மை ஆக்சிஸ் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி வாகை சூடவுள்ளதாக கணித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இந்த இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் நடந்துள்ளதால், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்த இரண்டு கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளன.
43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றும் (நவம்பர் 20 ஆம் தேதி) நடந்துள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்ற நாடு முழுவதும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்துக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 53 சீட்டுகளுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 25 சீட்டுகள் பெற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பின்படி, 53 சீட்டுகளுடன் தனிப் பெரும்பான்மையுடன் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications