ஜேஎன்யூவில் என்ன நடந்தது? டெல்லி கமிஷ்னரிடம் போன் போட்டு விசாரித்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை!
Recommended Video
டெல்லி: நேற்று ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அது தொடர்பாக டெல்லி கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் உடன் ஆலோசனை செய்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்டது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது..
நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கண்டனம் தெரிவித்தது
இந்த தாக்குதலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. மாணவர்கள் மீதான இப்படிப்பட்ட தாக்குதலை ஏற்க முடியாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்கள் கலவரம் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.

என்ன ஆலோசனை
இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆலோசனை நடத்தி இருக்கிறார். நேற்று டெல்லி போலீஸ் அதிகாரிகளை அழைத்த அவர், அவர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். டெல்லி போலீஸ் கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் உடன் இவர் ஆலோசனை செய்தார்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ்தான் டெல்லி போலீஸ் இயங்கி வருகிறது. நேற்றைய கலவரத்திற்கு டெல்லி போலீசும் காரணம் என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அமித் ஷா எப்படி
அமித் ஷாவின் இந்த ஆலோசனைக்கு பின் டெல்லி போலீசார் நேரடியாக ஜேஎன்யூ வளாகம் சென்றனர். அங்கு அவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்தும் வகையில் அவர்கள் அங்கேயே பேரணி நடத்தினார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications