நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.. தைரியமாக இருங்கள்.. ஜேஎன்யூ மாணவ சங்க தலைவியை சந்தித்த கனிமொழி!
குண்டர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷா கோஷை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து ஊக்கம் கொடுத்தார்.
டெல்லி: குண்டர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷா கோஷை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து ஊக்கம் கொடுத்தார்.
இந்தியாவில் அதிக ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக ஜேஎன்யூ பார்க்கப்படுகிறது. ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபிதான் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது.

சந்திப்பு
இந்த நிலையில் இன்று திமுக மூத்த உறுப்பினர் எம்பி கனிமொழி, ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷா கோஷை சந்தித்து ஆதரவு அளித்தார். டெல்லியில் ஐஷா தங்கியிருக்கும் வீட்டிற்கு நேரடியாக கனிமொழி சென்றார். பின் ஐஷா உடல் நிலை குறித்து கனிமொழி விசாரித்தார்.

எப்படி தாக்குதல்
ஜேஎன்யூவில் எப்படி தாக்குதல் நடந்தது? அந்த தாக்குதலுக்கு பின்னணி என்ன? யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை குறித்து விவரங்களை சேகரித்தார். ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட போது அங்கு முதல் ஆளாக சென்று பேசியவர் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவாதான்.

திமுக தொடக்கம்
திமுக தொடக்கத்தில் இருந்து இந்த பிரச்சனையில் மாணவர்கள் பக்கம் நிற்கிறது. இதில் ஜேஎன்யூ மாணவ சங்க தலைவி ஐஷாவை சந்தித்த கனிமொழி , நீங்கள் யாரும் பயப்பட கூடாது. தொடர்ந்து களத்தில் நில்லுங்கள். அஞ்ச வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் ஊட்டி இருக்கிறார்.
Recommended Video

தைரியம்
இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை ஜேஎன்யூ மாணவர்கள் உடன் கனிமொழி சந்திப்பு நடத்த உள்ளார். இதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் மாணவர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications