தீபிகா படுகோனுக்கு செம தைரியம்.. மக்களுக்கு அவர் ஊக்கம் அளிக்கிறார்.. ரகுராம் ராஜன் ஆச்சர்யம்!

நடிகை தீபிகா படுகோனின் செயல் துணிச்சலானது, அவர் இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகை தீபிகா படுகோனின் செயல் துணிச்சலானது, அவர் இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதற்கு எதிராக தினமும் ஜேஎன்யூவில் போராட்டம் நடக்கிறது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், கடந்த வாரம் ஜேஎன்யூவில் தாக்கப்பட்ட மாணவர்களை சென்று நேரில் சந்தித்தார். ஜேஏன்யூ மாணவர் சங்க தலைவர் ஐஷா கோஷ் உடன் அவர் பேசினார். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தீபிகா எப்படி

தீபிகா எப்படி

இந்த நிலையில் தீபிகாவின் செயலுக்கு ஆதரவாக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தன்னுடைய புதிய படம் வெளியாகிறது என்று தீபிகாவுக்கு கவலை இல்லை. அதை பற்றி எதுவும் யோசிக்காமல் தைரியமாக தீபிகா கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு நாட்டின் மீது அக்கறை இருக்கிறது.

நமக்கு எல்லாம்

நமக்கு எல்லாம்

நமக்கு எல்லாம் மிக சிறந்த ஊக்கமாக தீபிகா உருவெடுத்துள்ளார். எது உண்மை என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஜேஎன்யூவில் நடக்கும் விஷயங்கள் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

தீபிகா படுகோன் எப்படி

தீபிகா படுகோன் எப்படி

தீபிகா படுகோனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இவருக்கு ஆதரவாக அவர் நடித்து வெளியாகி இருக்கும் சப்பக் திரைப்படத்திற்கு பல மாநிலங்களில் வரி விலக்கு விதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு விதிக்கப்பட்டுள்ளது.

பலர் ஆதரவு

பலர் ஆதரவு

அதேபோல் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர்கள் ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இன்னொரு பக்கம் சப்பக் படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+